ஆன்மிகம்

உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை.. ஏராளமானோர் பங்கேற்பு!

மேலூரில் முத்துமாரியம்மன் கோவிலில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி நடைபெற்ற பூஜையில் திரளான பெண்கள் கலந்துக் கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை.. ஏராளமானோர் பங்கேற்பு!
உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை.. ஏராளமானோர் பங்கேற்பு!

மேலூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி நடைபெற்ற பூஜையில் திரளான பெண்கள் கலந்துக் கொண்டு பூஜை செய்து வழிபாடு செய்தனர். 

மதுரை மாவட்டம் மேலூர் மில்கேட் பகுதியில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் 43ஆம் ஆண்டு பங்குனி உற்சவ விழா கடந்த 20ஆம் தேதி கணபதி பூஜை மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முதல் நாளான இன்று திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. 

உலக நன்மை மற்றும் மழை வேண்டி நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில், மேலூர் மற்றும் மில்கேட் பகுதிகளைச் சேர்ந்த திரளான பெண்கள் கலந்துக் கொண்ட நிலையில்,  மேலூர் சிவன் கோயில் தலைமை குருக்கள் காளஹஸ்தீஸ்வரன் வேதமந்திரம் முழங்க திருவிளக்கு பூஜை மற்றும் வழிபாடு நடைப்பெற்றது. 

தொடர்ந்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் கலந்துக் கொண்ட பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாளை இரண்டாம் நிகழ்ச்சியாக பால்குடம், பரவைக்காவடி மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.