சினிமா

பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தில் இணையும் பிரபல நடிகை

இந்த படத்தில் கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கும் ‘வேட்டுவம்’ படத்தில் இணையும் பிரபல நடிகை
இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகை சோபிதா துலிபாலா

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் புதிதாக ‘வேட்டுவம்’ என்ற படத்தை எழுதி, இயக்கி வருகிறார். இவர் முன்னதாக இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான  ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும், நல்ல வசூல் செய்தது. மேலும் நடிகர் விக்ரமின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

Read more: அக்காவை துடிதுடிக்க வெட்டிக்கொன்ற சகோதரர்- விருதுகரில் பரபரப்பு

இந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டியோஸ் நிறுவனம் சார்பில்  ‘வேட்டுவம்’ என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார்.

Read more: மக்களவையில் நிறைவேறியது வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா

மேலும், அசோக் செல்வம் மற்றும் பகத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தில் கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தமிழ்  ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.