தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம், தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
தாய்லாந்தில் பிரதமர் மோடி
இந்த நிலையில் நாளை ( ஏப்.4) நடைபெறும் 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார்.அங்கு பிரதமர் மோடி ஏராளமான இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
Read more: போலீசில் சிக்கிய சச்சின்...பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி
தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷினவத்ராவை சந்திக்கிறார். அப்போது பிரதமருக்கு சம்பரதாய வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும், இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவுகள், தொழில் வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என கூறப்படுகிறது.
இலங்கைக்கு பயணம்
இதையடுத்து பிரதமர் மோடி, தாய்லாந்து மன்னர் மகா விஜிலோங்கோர்ன், ராணி சுதிடா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். மேலும் பிரதமர் மோடியும், தாய்லாந்து பிரதமர் ஷினாவத்ராவும் தாய்லாந்தின் சிறந்த 6 கோவில்களில் ஒரு கோவிலை மட்டும் பார்வையிடுகிறார்கள். தாய்லாந்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் நோபாள பிரதமர் சர்மா ஒலி, வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
Read more: தனுஷ் விவகாரம்: “3 கோடி அட்வான்ஸ்க்கு 16 கோடி கேட்பதா...” - ஆர்.கே.செல்வமணி விளக்கம்
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இலங்கை பயணம் மேற்கொள்கிறார். அனுர குமார திசநாயக்க இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடி இலங்கைக்கு முதல் முறையாக பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
தாய்லாந்தில் பிரதமர் மோடி- உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்
விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தாய்லாந்து அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.