K U M U D A M   N E W S
Promotional Banner

பிரதமர்

அமெரிக்கா - இந்தியா வர்த்தகப் போர்.. பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்!

அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து இந்திய பொருளாதார வர்த்தக நெருக்கடியைச் சமாளிக்க, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

50 ஆண்டுகால சினிமா பயணம்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் தடம்பதித்து தனது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- ராகுல் காந்தி புறக்கணிப்பு

டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே புறக்கணித்துள்ளனர்

தீபாவளிக்கு பரிசு காத்திருக்கிறது.. ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் - பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, வரும் தீபாவளிக்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) பெரிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது – பிரதமர் மோடி அதிரடி

மற்றவர்களை விமர்சனம் செய்வதில் நமது ஆற்றலை வீணாக்கக்கூடாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்...அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக பதற்றம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியால் ஏற்கமுடியவில்லை - பிரதமர் குற்றச்சாட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டதை காங்கிரசாலும், அதன் கூட்டணிக் கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லையெனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் -பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை

இது உலகப் பண்பாட்டுக்கு இந்தியா கொடுக்கும் கொடை என்று கருதப்படும்; ஆவனசெய்ய வேண்டுகிறோம்.ஆகஸ்ட் 15 அன்று தொலைக்காட்சி முன்னால் ஆவலோடு காத்திருப்போம் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

"மக்களின் மனங்களை ஒருபோதும் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியாது" - பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் பதிலுரையில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய பிரதமர் மோடி, மக்களின் மனங்களை ஒருபோதும் காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியாது என்று விமர்சித்துள்ளார்.

“பாகிஸ்தானின் இதயம் அழிப்பு” –நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி

பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார் என அமித்ஷா பேச்சு

அரசியல் ஆதாய நாடகத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் – விஜய்

பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் என விஜய் விமர்சனம்

ராஜேந்திர சோழனுக்கு சிலை.. கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் பிரதமருக்கு நன்றி!

அரியலூர் ராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனுக்கும் மிகப் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும் என்ற பிரதமரின் அறிவிப்புக்கு கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமத்தின் சார்பில் அதன் தலைவர் கோமகன் நன்றி தெரிவித்துள்ளார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி.. பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம்!

திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.

கொலை முதல் கிட்னி திருட்டு வரை .. எல்லா குற்றத்திலும் திமுகவிற்கு பங்கு: தமிழிசை பேட்டி!

தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கிட்னி திருட்டு அனைத்திலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.

பிரதமர் மோடி பார்வையிட உள்ள கண்காட்சி...அரியலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக வெளிநாடு பயணம்... முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

பிரதமர் மோடி இன்று (ஜூலை 23) இங்கிலாந்திற்கு அரசு முறை பயணமாக செல்லும் நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jagdeep Dhankhar resigns: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளதிபதி முர்முவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு வெடிகுண்டு மிரட்டல்- போலீசில் பாஜகவினர் புகார்

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கமலாலயத்திற்கு வந்த கடிதம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.

காமராஜர் பிறந்தநாள்.. புகழாரம் சூட்டிய தலைவர்கள்

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருவதாகவும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.