இனி மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்.. என்ன காரணம் தெரியுமா?

மதுரை விமான நிலையம் நாளை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரம் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். 

Sep 30, 2024 - 16:58
 0
இனி மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்.. என்ன காரணம் தெரியுமா?

மதுரை விமான நிலையம் நாளை (அக்டோபர் 1) முதல் 24 மணி நேரம் செயல்படும் என மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் அறிவித்துள்ளார். 

இதுவரை காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது மக்களுக்கு குட் நியூசாக அமைந்துள்ளது. மேலும் 24 மணி நேரம் இயக்கவுள்ள இந்த விமான நிலையத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மதுரை விமான நிலையத்தின் சிறப்பு:

1942ம் ஆண்டில் முதன்முதலில் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் ராயல் விமானப்படையால் பயன்படுத்தப்பட்டதே இன்றைய மதுரை விமான நிலையம். சுதந்திரத்திற்கு பிறகு 1956ம் ஆண்டில் தான் இந்த விமான நிலையத்தில் முதல் பயணிகள் விமானம் சென்றது. இதனையடுத்து 1957ம் ஆண்டில் மதுரை சர்வதேச விமான நிலையம் தொடர் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டது.

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இங்கிருந்து தான் சென்னை, ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும் சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 12 லட்சம் பயணிகள் இங்கிருந்து பயணம் செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் 20வது இடத்திலும் இடம்பெற்றிருந்தது மதுரை விமான நிலையம்.

60 ஆண்டுகளுக்கு மேலாக சேவையில் இருக்கும் இந்த விமான நிலையம் இரண்டு அடுத்தடுத்த முனையங்களை கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் தற்போது 500 பேர் அமரும் வசதி உள்ளது. மேலும், 3+1 பேக்கேன் கன்வேயர்கள் மற்றும் 216 சிஐஎஸ்எஃப் பணியாளர்கள் உள்ளனர். இங்கு 7,500 அடி ஓடுபாதையும் உள்ளது. மதுரை விமான நிலையம் மதுரை ரயில்வே ஜங்ஷனில் இருந்து வெறும் 12 கிமீ தொலைவில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை சிறப்புகளை கொண்டுள்ள இந்த விமான நிலையம் இன்று வரை சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படவில்லை என்பதே உண்மை. இதனால் தற்போது வரை கஸ்டம் விமான நிலையமாக மட்டுமே இது செயல்பட்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தை பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 

மேலும் படிக்க:  நேபாளம் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு... பள்ளிகள் மூட உத்தரவு

இந்நிலையில் சர்வதேச முனையமாக அறிவிக்கப்பட வேண்டுமெனில் ஒரு விமான நிலையம் 24 மணி நேரம் செயல்பட வேண்டும். இதனால் தான் தற்போது நாளையிலிருந்து (அக்.1) இந்த விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow