வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிடவே கூடாது! இல்லைனா பிரச்சனை உங்களுக்குதான்...
Foods To Avoid in Empty Stomach : காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டிய மற்றும் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதைக் கீழே பார்க்கலாம்.
Foods To Avoid in Empty Stomach : காலையில் எழுந்ததுமே வெறும் வயிற்றில் எந்தெந்த உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது. காலையில் நீங்கள் சாப்பிடும் உணவுதான் அந்த நாள் முழுவதும் நீங்கள் எப்படி செயல்படப்போகிறீர்கள் என்பதை தீர்மாணிக்கும்.
ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் எடுத்துக்கொண்டால் அந்த நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாகவும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். எந்த வேலையையும் சுலபமாக செய்ய முடியும். அதேபோல் சில உணவுகள் உங்களது வயிற்றில் அசொகரியத்தை ஏற்படுத்தி உங்கள் மனநிலையை சீர் குலைக்கலாம். காலையில் எழுந்ததும் சாப்பிட வேண்டிய மற்றும் முற்றிலும் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதைக் கீழே பார்க்கலாம்.
காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்:
பப்பாளி:
பப்பாளி பழத்தில் இருக்கும் அதிகளவு நார்ச்சத்து உங்கள் வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெறும் வயிற்றில் பப்பாளியை சாப்பிடும்போது குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் எளிதாக வெயேறிவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் பப்பாளி உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டதால், அதிகமாக சாப்பிடக் கூடாது எனவும் எச்சரிக்கின்றனர்.
தர்பூசணி:
தர்பூசணி பழத்தில் அதிகளவில் நீர்ச்சத்து இருப்பது அனைவரும் அறிந்ததே. இதிலுள்ள நீர்ச்சத்து உடலை நீரேற்றத்துடன் வைப்பதோடு சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் இதிலுள்ள லைக்கோபீன் என்ற அமிலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உலர் திராட்சைகள்:
உலர் திராட்சைகளை அப்படியே சாப்பிடுவதை விட இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது கூடுதல் நன்மைகளை அளிக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
பாதாம் மற்றும் டேட்ஸ்:
உலர் திராட்சைகளைப் போலவே பாதாம் மற்றும் டேட்ஸ் பழத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து உண்பது சிறந்தது. இவை வயிற்றிலுள்ள PH அளவை சமமாக வைப்பதோடு உடல் எடையை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள புரத சத்துக்கள் முடி உதிர்வை குறைப்பதோடு சருமத்தையும் பளபளப்பாக வைக்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்:
பச்சைக் காய்கறிகள்:
காய்கறிகள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்றுதான். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் பச்சை காய்களிகள் உண்பது காசு கொடுத்து நோய் வாங்குவதற்கு சமமாகும். இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு தீவிர வயிற்று வலிக்கும் வழிவகுக்கின்றன.
சிட்ரஸ் பழங்கள்:
எலுமிச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட புளிப்புத்தன்மை அதிகமுள்ள சிட்ரஸ் பழங்களில் ஃப்ரக்டோஸ் என்ற அமிலம் உள்ளது. இது நமது வயிற்றிலுள்ள அமிலத்துடன் சேரும்போது பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு வாந்தி, வயிற்று அசொகரியம் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகின்றன.
சாக்லேட், பேக்கரி உணவுகள்:
காலையில் எழுந்ததும் சர்க்கரைக்கு மிகப்பெரிய NO சொல்வது கட்டாயம். வெறும் வயிற்றில் இனிப்பு வகை உணவுகளை உட்கொண்டால் சர்க்கரை நோய், பலவீனமான எலும்புகள், எலும்பு தேய்மானம், கை, கால்கள் வீக்கம் உள்ளிட்ட உடல் பிரச்சனைகள் உண்டாகும்.
காரமான உணவுகள்:
காரமான உணவுகள் பலருக்கும் ஃபேவரைட்டாக இருக்கலாம். ஆனால் காலையில் காரமான உணவுகள் உட்கொள்வது வயிற்று வலி, வயிறு உப்புசம், ஏப்பம், ஆசிட் ரிஃப்ளக்ஸ், அஜீரணம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிவகுப்போம்.
What's Your Reaction?