அட்டை பெட்டிக்குள் பச்சை உடும்பு, கருங்குரங்குகள்.. மலேசிய நாட்டு பெண் சிக்கியது எப்படி?
மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது மலேசிய நாட்டு பெண் சுற்றுலா பயணியாக வந்திருந்தார்.
அவர் 2 பெரிய அளவிலான அட்டை பெட்டிகள் வைத்திருந்தார். அந்த பெட்டிகளில் என்ன இருக்கிறது? என்று சுங்க இலாகா அதிகாரிகள் கேட்டபோது முன்னுக்கு பின் முரனாக பேசினார். இதை அடுத்து சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் பெட்டிகளை திறந்து பார்த்து பரிசோதித்தனர். அந்தக் கூடைக்குள் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபூர்வ வகை உயிரினங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
மேலும் படிக்க: 3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையை தொட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி
அந்தக் கூடைகளில் கிரீன் இகுவானா (green Iguana) எனப்படும் 52 ஆப்பிரிக்க நாட்டு பச்சை உடம்புகள் உயிருடன் இருந்தன. 4 ஜியாமங்க் கிப்பான் என்ற ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து மலேசிய பெண் பயணியை வெளியில் விடாமல் அறையில் அடைத்து வைத்தனர்.
அதோடு சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, மலேசிய பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர். கடத்திக் கொண்டு வந்த உயிரினங்களையும் ஆய்வு செய்தனர்.
மேலும் படிக்க: வயநாட்டில் போல சென்னையிலும் நடவடிக்கை.. ட்ரோன்களை பறக்கவிட்டு ஒத்திகை
பெண் பயணி கொண்டு வந்துள்ள உயிரினங்களை வாங்கி செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த வாலிபர் விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் காத்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து சுங்கு இலாகா அதிகாரிகள் வாலிபரையும் கைது செய்தனர். பறிமுதல் ஆப்பிரிக்க வனப்பகுதியில் காணப்படும் உயிரினங்கள். நாட்டுக்குள் அனுமதித்தால் நோய்க்கிருமிகள் பரவக்கூடும்.
எனவே மீண்டும் மலேசிய நாட்டிற்கே திருப்பி அனுப்பும் படியும் மத்திய வன துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் கருங்குரங்கு, பச்சை உடும்புகள் ஆகியவற்றை திருப்பி அனுப்பினர்.
What's Your Reaction?