அரசு பள்ளியின் பெயரை மாற்றிய அமைச்சர்.. குவியும் பாராட்டு..!

அரசுப் பள்ளி ‘அரிசன் காலனி’ என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், மல்லசமுத்திரம் கிழக்கு என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து பெயர் மாற்றம் செய்தார்.

Nov 26, 2024 - 10:26
 0
அரசு பள்ளியின் பெயரை மாற்றிய அமைச்சர்.. குவியும் பாராட்டு..!

அரசுப் பள்ளி ‘அரிசன் காலனி’ என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், மல்லசமுத்திரம் கிழக்கு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் வந்து தானே பெயிண்டால் அழித்து பெயர் மாற்றம் செய்தார். 

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளி என்பதை குறிக்கின்ற வகையில் இடம் பெற்றிருந்த அரிஜன் காலனி என்கிற பெயரை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழித்தார்.

அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று 'அரிசன் காலனி' என்ற பெயரில் இருந்ததை மாற்றும் செய்ய வேண்டும் எனும் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்தார். 

மேலும் "ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு" என பெயர் மாற்றம் hn செய்யப்பட்டதற்கான அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி, இதற்காக போராடிய ஊர் பெரியவர் திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.

இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் திரு.G.அன்பழகன் அவர்களிடம் ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தெரிவித்தார். 

திடீரென்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு அமைச்சர் வருகை தந்ததால் ஊர்மக்களும், ஆசிரியர்களும் ஒன்று கூடினார்கள். தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற நேரடியாக வந்ததை அறிந்து அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என கலைஞரின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow