நடிகர் மோகன்லாலை வைத்து பிருத்விராஜ் தான் இயக்கிய லூசிஃபர் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். கடந்த மார்ச் 27 ஆம் தேதி லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக எல்2 எம்புரான் படத்தை வெளியிட்டார். இந்தப் படம் வெளியான நாளில் இருந்தே பல சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.
பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து, நேற்று அமலாக்கத்துறையினர் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபலனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, இன்று எம்புரான் படத்தின் இயக்குநரான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் சோதனை நடத்தினர்.
கேரளா கோழிகோட்டில் 1 இடம், சென்னையில் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சட்டவிரோத பணபரிமாற்ற ஆவணங்கள் மற்றும் 1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்.
இந்த சிட் பண்டஸ் நிறுவனம் வெளி நாடுகளில் வசிக்கும் நபர்களிடமிருந்து அனுமதி பெறாமல் சீட்டு வசூலித்திருப்பது சோதனையில் தெரியவந்தது. இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.
வெளி நாடுகளில் வசிப்பவர்களிடம் 371 கோடி ரூபாய் ரொக்கமாகவும், 220 கோடி ரூபாய் காசோலையாகவும் வசூல் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஃபெமா சட்டத்தை மீறி கணிசமான தொகை பணமாக செலுத்தி இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு
எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல்!
எம்புரான் திரைப்படத்தை வெளியிட்ட கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். தொடர்ந்து, மலையாள நடிகர் பிருத்விராஜ் எம்புரான் படத்திற்க்கு முன் நடித்த சில படங்களில் பெற்ற வருமானங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.