3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையை தொட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

மழை ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

Oct 16, 2024 - 21:43
Oct 16, 2024 - 22:56
 0
3 நாட்கள் ஆச்சு.. இபிஎஸ் கால்கள் தரையை தொட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி
எடப்பாடி பழனிசாமியின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு பால், பிஸ்கட், ரஸ்க் உள்ளிட்ட மழை நிவாரண பொருட்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார். பின்னர் பாரிமுனையில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “மழை ஏற்பட்ட தினம் தொடங்கி மூன்றாவது நாளாக 24 மணி நேரமும் முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். 2021 ஆண்டுக்குப் பிறகு பெருமழை பெய்த இடங்களில் எல்லாம் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்ணீர் தேங்குவது குறைந்து வருகிறது.

தாழ்வான பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் 17 செ.மீட்டர் கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்கவில்லை. மின்சாரம்,பால் விநியோகம், உணவு விநியோகம் போன்றவற்றில் எந்த தடையும் இல்லை. எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்கள் எப்படி மக்களை காப்பதற்கு போராடுவார்களோ அப்படி முதலமைச்சர் களத்தில் மக்களை காக்க போராடி வருகிறார்.

மேலும் படிக்க: வயநாட்டில் போல சென்னையிலும் நடவடிக்கை.. ட்ரோன்களை பறக்கவிட்டு ஒத்திகை

பால் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட், ரஸ்க் என உணவுப் பொருட்கள் எந்தவித தடையும் இல்லாமல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உணவு விநியோகமும் சரியான அளவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தான் தாழ்வான இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மழைநீர் வடிந்துள்ளது.

மழை ஆரம்பித்தவுடன் களத்தில் நின்றவர் தமிழக முதலமைச்சர். வெள்ளை அறிக்கை கேட்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு என்னுடைய பதில், மழை ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகி உள்ளன எதிர்க்கட்சி தலைவரின் கால்கள் எங்கேயாவது தரையில் பட்டுள்ளதா? அதிமுகவில் நடக்கும் குளறுபடிகளுக்கு முதலில் எதிர்க்கட்சித் தலைவர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

ஆட்சியில் நிர்வாக செயல்பாடுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட திமுக தயாராக இருக்கிறது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தான் பல இடங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தான் தண்ணீர் தேங்கவில்லை.

இதையும் படிங்க: செயலில் ஒன்றுமில்லை.. விளம்பரம் தான் அதிகமா இருக்கு.. தமிழிசை சவுந்தரராஜன்

40 ஆண்டு 50 ஆண்டுகாலம் மழைநீர் தேங்கிய இடங்களில் திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததால் தண்ணீர் தேங்கவில்லை தாழ்வான இடங்களில் தேங்கும் மழை நீருக்கும் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குறை சொல்லி கூவுகின்ற கூச்சலுக்கு நாங்கள் செவி சாய்க்க தயாராக இல்லை மக்கள் பணி செய்து கொண்டிருக்கிறோம்.

கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜவகர் நகரில் தண்ணீர் தேங்கவில்லை. ஓட முடிந்தவர்களால் தான் ஓட முடியும். மழை வெள்ளத்தில் பாஜக களத்தில் எங்கே இருக்கிறது. கடவுளின் அரசாக கடவுளாக முதல்வர் சுற்றி வருகிறார். அவரை இவர்கள் குறைக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow