மருமகள் மீது கை வைத்த மாமனார்... கொதித்துப்போன மனைவி.... கணவனுக்கு ஃபயர் ட்ரீட்மென்ட்
மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தீ வைத்து கொளுத்தப்பட்ட மாமனார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்

நெய்வேலி அருகே மருமகளுக்கு பாலியல் தொல்லை மாமனார் தீ வைத்து கொளுத்தப்பட்டதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே பழைய நெய்வேலி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற கட்டிட தொழிலாளி மருமகளுக்கு தொடர்ந்து பாலியல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு மருமகளை மாமனார் சீண்டியதாக கூறப்படுகிறது. இதனால் சரவணனை அவரது மனைவியும் மருமகளும் சேர்ந்து தீ வைத்து கொளுத்தியுள்ளர். இதில் படுகாயம் அடைந்த சரவணன் சிதம்பரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Read more: தமிழ் மொழியை மத்திய அரசு சிறுமைப்படுத்தும் நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்
இந்த நிலையில், தற்போது கட்டிய தொழிலாளி சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் தற்காப்பிற்காகவே இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவந்ததால், விசாரணைக்கு பிறகு சரவணனின் மனைவி மற்றும் மருமகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மருமகள் மீது வைத்த மாமனாருக்கு கொதித்துப்போன மனைவி மற்றும் மருமகள் இருவரும் சேர்ந்து தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நம்மை ஆளுகிறவர்களுக்கு படிப்பறிவு இல்லை.. திமுகவை தாக்கிய அண்ணாமலை?
What's Your Reaction?






