தமிழ் மொழியை மத்திய அரசு சிறுமைப்படுத்தும் நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்

அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு  பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை என்றார்

Mar 13, 2025 - 10:41
Mar 13, 2025 - 10:44
 0
தமிழ் மொழியை மத்திய அரசு சிறுமைப்படுத்தும் நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

பெரியாரையும், தமிழ் மொழியையும் சிறுமைப்படுத்துவதை மத்திய அரசு ஒரு நடவடிக்கையாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் காலநிலை வீரர்கள் என்கிற திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “நாம் நாகரிகமற்றவர்களைப் போல தெரிகின்றோமா என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர கருத்துக்கு பதில் அளித்தார்.

 அமலாக்கத்துறை சோதனையை திசை திருப்ப திமுக இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புவதாக பாஜக விமர்சனத்திற்கு  பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக இந்த பிரச்னை சென்று கொண்டிருப்பதால் இந்த கருத்தில் உண்மையில்லை. மேலும் அமலாக்கத்துறையை பாஜக தான் அனுப்பி இருக்கின்றது.நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு  விவகாரத்தில் மற்ற மாநில கட்சி தலைவர்களையும், முதலமைச்சர்களையும் திமுக குழு சந்தித்து இருக்கின்றது. அந்த குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெறும். அதில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு  விவகாரத்தில் மற்ற மாநில கட்சி தலைவர்களையும், முதலமைச்சர்களையும் திமுக குழு சந்தித்து இருக்கின்றது. அந்த குழுவின் கூட்டம் சென்னையில் நடைபெறும். அதில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக மக்களவையில் பிஎம்ஸ்ரீ திட்ட நிதி குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துக்கொண்டிருக்கும் போது, அவரது கருத்துக்கு திமுக எம்.பிக்கள் அவையின் மையப்பகுதியில் சென்று முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பதில் அளித்துக்கொண்டிருந்த தர்மேந்திர பிரதான், ஒரு கட்டத்தில் திமுக எம்.பிக்கள் நாகரிகமற்றவர்கள் என்றும் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைப்பவர்கள் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு திமுக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பேசிய தர்மேந்திர பிரதான், தான் குறிப்பிட்ட அந்த கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது

 

 Read more : காசு தந்தா போஸ்ட்.. தவெக நிர்வாகி ஆடியோவால் பரபரப்பு.. ஆக்‌ஷனில் இறங்குவாரா விஜய்?

 

 

 

 

 

 

 

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow