ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dec 27, 2024 - 14:52
Dec 28, 2024 - 15:20
 0
ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பெரியார் சிலை உடைப்பு விவகாரம் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து பேசியதற்காகவும் பாஜக மூத்த தலைவர் ஹெ.ச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும்  பல்வேறு காவல்நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கபட்டன. 

இந்த புகார்களின் அடிப்படையில்   பதியப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இரு வழக்குகளிலும் ஹெச்.ராஜாவுக்கு  தலா  6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் இருந்து ஐந்து மாதங்களுக்கு பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தாமதத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேரடி சாட்சியங்களோ, ஆதாரங்காளோ இல்லாத நிலையில் விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சட்ட விரோதமானது எனவும், சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், மேல் முறையீட்டு வழக்கு முடிவு காணும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தபோது, ஹெ.ச் ராஜா தரப்பில் விசாரணை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்கனவே நிறுத்து வைத்துள்ளதாகவும், இந்த உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதி, மேல் முறையீட்டு வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கும் வரை மனுதாரருக்கு விதிக்கபட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

மேலும், ஹெ.ச்.ராஜாவின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow