வெடித்து சிதறிய விமானம்.. 72 பயணிகளின் நிலை என்ன..?
கஜகஸ்தான் அக்டாவ் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆசியாவில் அமைந்துள்ள கஜகஸ்தான் நாட்டின் அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் (Baku) இருந்து 67 பயணிகள், விமானக் குழுவினர் ஐந்து பேர் என மொத்தம் 72 பேருடன் அஜர்பைஜான் விமானம் ஒன்று ரஷ்யாவின் க்ரோஸ்னியை (Grozny) நோக்கி சென்றது.
அப்போது, க்ரோஸ்னியில் அதிகப்படியான பனி மூட்டம் நிலவியதால் விமானம் கஜகஸ்தானின் மேற்கில் உள்ள அக்டாவ் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விமானத்தை அவசரமாக தரையிறக்குமாறு அஜர்பைஜான் விமான நிலையத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அக்டாவ் (Aktau) விமான நிலையத்திற்கு அருகே வட்டமடித்த விமானம் தரையிறங்க முயற்சித்த போது திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அக்டாவ் விமான நிலையத்திற்கு அருகே அந்த விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறும் பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?