முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. காவல்துறை முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.

Jan 7, 2025 - 12:35
Jan 7, 2025 - 12:40
 0
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கு.. காவல்துறை முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் காவல்துறை முறையீட்டை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல்துறை தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் அதனை நீதிபதி ஏற்க மறுத்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி மூலம், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, விருதுநகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி என்பவர், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

உறுதியளித்தபடி வேலை வாங்கிக் கொடுக்காததால், ரவீந்திரன், போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் படிக்க : ஆளுநரை காப்பாற்றும் அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி.. திமுக ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. உத்தரவு அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்  துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால், அந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், தமிழக போலீஸாருக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லாததால், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படியும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தார்.

மேலும் படிக்க : பண மோசடி வழக்கு..  ராஜேந்திர பாலாஜியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow