சாம்பியன் டிராபி தொடர் அட்டவணை வெளியீடு... இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எங்கு..? எப்போது..?

ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் 2025 ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Dec 24, 2024 - 21:37
Dec 24, 2024 - 21:46
 0
சாம்பியன் டிராபி தொடர் அட்டவணை வெளியீடு... இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எங்கு..?  எப்போது..?
சாம்பியன் டிராபி தொடர் அட்டவணை வெளியீடு... இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் எங்கு..? எப்போது..?

ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் 2025 ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான கால அட்டவணையை ஐசிசி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றால், லாகூரில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் சர்வதேச ஸ்டேடியத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி விளையாடும் 3 போட்டிகள் மட்டுமே துபாயில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சாம்பியன் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது பிசிசிஐ தெரிவித்த நிலையில், இந்த தொடருக்கான கால அட்டவணை வெளியாவதில் காலதாமதமானது. இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானும் அடுத்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இரு நாடுகளிலும் இன்றி பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப் போட்டிகள் உட்பட மொத்தம் 15 போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் தலா 4 என 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. க்ரூப் A பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா மற்றும் வங்கதேசமும், க்ரூப் B பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஐசிசி வெளியிட்ட அட்டவணையின்படி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகின்ற பிப்ரவரி 19 நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கராச்சியில் முதல் போட்டியுடம் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெறும். 

இந்திய அணி தனது அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடவுள்ளது. சாம்பியன் டிராபி தொடரின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தான் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியாவின் நேர சுழற்சி பாகிஸ்தானை விட 30 நிமிடங்கள் முன்னதாக இருப்பதால், இந்த போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow