விண்வெளியில் கிறிஸ்துமஸ் விழா.. சுனிதா எப்போது வருவார்..? நெட்டிசன்கள் கேள்வி

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவிக்கும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது. 

Dec 25, 2024 - 10:34
 0
விண்வெளியில் கிறிஸ்துமஸ் விழா.. சுனிதா எப்போது வருவார்..? நெட்டிசன்கள் கேள்வி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் நாசா சார்பில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். எட்டு நாட்கள் பயணமாக விண்வெளி நிலையத்திற்கு சென்றவர்கள் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாத கணக்கில் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். 

இவர்களை மீட்பதற்காக நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் க்ரூ-9 மிஷனுக்கான விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்திருந்தது. ஆனால், தற்போது அதன் புறப்பாடு மேலும் தாமதம் அடைந்துள்ளதால் இருவரும் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,  சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தவாறே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார். அண்மையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதில், சுனிதா வில்லியம் உடல் எடை மிகவும் குறைந்து காணப்பட்டார். மன அழுத்தம் காரணமாகவே அவர் அவ்வாறு இருப்பதாக தகவல் வெளியானது. 

இதற்கு மறுப்பு தெரிவித்த நாசா, விண்வெளி வீரர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருவதாகவும், அவர்களுக்கு வழக்கமான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் விளக்கம் அளித்தது. தொடந்து, தான் அதே உடல் எடையுடன் இருப்பதாகவும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் மைக்ரோ கிராவிட்டியினால் ஏற்படும் வழக்கமான மாற்றத்தால் அவ்வாறு தெரிவதாகவும் சுனிதா வில்லியம் விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம் தனது சக விண்வெளி வீரர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் வீடியோவை நாசா பகிர்ந்துள்ளது. அதில், அவர்கள் ஹாம் ரேடியோ மைக் வைத்து மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை கூறினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சுனிதா எப்போது பூமிக்கு திரும்புவார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow