பாக்சிங் டே டெஸ்ட்.. இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா.. சோகத்தில் இந்திய ரசிகர்கள்..!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை வகிக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்தது.
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியான நான்காவது போட்டி மெல்பர்ன் மைதானத்தில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 474 ரன்கள் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஸ்மித் சதம் விளாசினார். சாம் கான்ஸ்டாஸ், கவாஜா மற்றும் லபுஷேன் அரைசதம் கடந்தனர். கேப்டன் கம்மின்ஸ் 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்திய அணியில் முன்னணி வீரர்கள் அனைத்தும் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில்,இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நிதிஷ் குமார் ரெட்டி அதிரடியாக ஆடி சதம் அடித்தார். இதனால் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகாமல் தப்பிய நிலையில், 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆட்டத்தின் கடைசி நாளான இன்று இந்தியா விரட்டியது. கேப்டன் ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரோஹித், 9 ரன்கள் எடுத்து கம்மின்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். அதே ஓவரில் கே.எல்.ராகுல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஸ்டார்க் பந்தில் கோலி வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 234 ரன்கள் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதலில் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற 105 ரன்களையும் சேர்த்து இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 5ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில் 92 ஓர்களில் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில், இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
What's Your Reaction?