மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்.என். ரவியை ராஜ் பவனில் நேற்று பாஜக மாநில தலைவர் ஆளுநர் ரவி சந்தித்து அண்ணாமலை பலகலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வரும் சூழலில் ஆளுநரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் ஆளுநர் ரவியை ஒரு மணி நேரம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தியது. ஏழு மணி நேர முதல் நாள் விசாரணைக்கு பிறகு 1 மணி நேரத்திற்கு மேலாக ஆளுநரை , ஆளுநர் மாளிகையில் தேசிய மகளிர் ஆணைய குழுவினர் சந்தித்து விசாரணை தொடர்பாக ஆளுநரோடு கலந்தாலோசனை செய்தனர். தொடர்ந்து இன்றும் தேசிய மகளிர் ஆணையம் தங்களுடைய விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.
அண்ணா பல்கலை கழக சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதியை வழங்கிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஏற்கனவே கடிதமும் எழுதி இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் ஆளுநர் உடனான சந்திப்பை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.
சட்டம் ஒழுங்கு , பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆளுநரை சந்தித்து மனு கொடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஆளுநரை மரியாதையை நிமித்தமாக சந்தித்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தகவலாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று ஆளுநரை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்தித்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?