சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு.. நாளை விசாரணை..!

திமுக எம்.பி. கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Jan 8, 2025 - 15:21
Jan 8, 2025 - 15:34
 0
சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு.. நாளை விசாரணை..!
சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய மனு.. நாளை விசாரணை..!

திமுக எம்.பி. கதிர் ஆனந்த்க்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
.

திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 3ம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. கிங்ஸ்டன் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அந்த கல்லூரியின் சர்வர் ரூம்-க்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது. 

திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லுாரியில், நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை நிறைவடைந்துள்ளது. சுமார் 44 மணி நேரம் நடந்த இந்த ரெய்டு நிறைவடைந்த நிலையில், பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சீலை அகற்ற உத்தரவிடக்கோரி கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமலாக்கத்துறையின் சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

சர்வர் ரூம்-க்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை செயல்பட முடியாததால் கல்லூரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

தற்போது கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow