அவனியாபுரம் ஜல்லிக்கட்டு.. மதுரை காவல் ஆணையாளர் நேரில் ஆய்வு..!
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தை மதுரை காவல் ஆணையாளர் நேரில் ஆய்வு.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தினை மதுரை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் தமிழர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டியில், 1000க்கும் மேற்பட்ட காளைகள், இளைஞர்கள் கலந்து கொள்வார்கள்.
அடுத்த வருடம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தைத்திருநாள் பொங்கல் அன்று உலகமே உற்று நோக்கும் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனை அடுத்து பாலமேடு மற்றும் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் பார்வையாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. பார்வையாளர் கேலரி தடுப்பு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவற்றுக்காக ரூ.43.79 லட்சத்துக்கு டெண்டர் கோரியுள்ளது. டெண்டர்கள் எடுப்போர், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள், அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வார்கள். இந்த டெண்டருக்கான ஒப்பந்தபுள்ளியை நேற்று முன்தினம் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்னும் ஜல்லிக்கட்டுக்கு 20 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் திடீரென்று மதுரை மாவட்ட காவல் ஆணையாளர் லோகநாதன் திடீர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் காளை பரிசோதனை மையம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், சிகிச்சை அறை, காலை சென்றடையும் இடம் போன்ற இடங்களை ஆய்வு செய்தார் அவனே அப்புறம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற போது நடந்த இடையூறுகள் குறித்தும் தற்போது அதை முழுமையாக சரி செய்வதற்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
What's Your Reaction?