முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் - துணைமுதல்வர் பேச்சு

பொள்ளாச்சியில் நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரித்துதான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது. அதே போல், முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Jan 9, 2025 - 20:18
Jan 9, 2025 - 20:18
 0
முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் - துணைமுதல்வர் பேச்சு
முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் - துணைமுதல்வர் பேச்சு

கடந்த ஆட்சியில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரித்துதான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது.  அதே போல், முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் என்று துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

திமுக சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாமன்ற உறுப்பினர் சிற்றரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கடந்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் யாரை வேட்பாளராக நிறுத்துகிறாரோ அவர் யாராக இருந்தாலும் வெற்றிப் பெற வைக்க வேண்டும் என இதே இடத்தில் நின்று கோரிக்கை வைத்தேன். அப்போது, மத்திய சென்னை தொகுதிக்குபட்ட அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் தொகுதி என 3 சட்டப்பேரவை தொகுதிகளில் கடும் போட்டி எழுந்தது யார் அதிக வாக்குகளை பெற்றுக் கொடுப்பது என? அதேப்போன்று சொன்னதை செய்துக் காட்டிய தொகுதி சேப்பாக்கம் தொகுதி. மத்திய சென்னை தொகுதியில் 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தை பெற்றுக் கொடுத்தது சேப்பாக்கம் தொகுதி என்று பேசினார்.

13 மாதங்களில் 2026 ஆம் ஆண்டு மிக மிக முக்கியமான சட்டமன்றத் தேர்தலை சந்திக்க போகிறோம். முதலமைச்சர் சொன்னது போல் 200 தொகுதிகளில் வெற்றிப் பெறுவோம். அதில் தொகுதியில் முதல் தொகுதியாக சேப்பாக்கம் தொகுதியை வெற்றிப் பெற வைக்க வேண்டும். சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றிப் பெற வைக்க வேண்டும்.

இந்த முறை தலைவர் என்னை வேறு தொகுதிக்கு மாற்றினாலும் மாற்றலாம். ஆனால் நீங்கள் விடமாட்டீர்கள். மக்களுடன் நெருங்கி பழக வேண்டும். மக்கள் நலத்திட்டங்களால்தான் முதலமைச்சருக்கு தொடர்ந்து 10 தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளார்.

தேர்தலுக்குள் ஒவ்வொரு வாக்களரையும் குறைந்தது நான்கு முறை சந்திக்க வேண்டும். அரசின் சாதனைகளைச் சொல்ல வேண்டும். எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பயனடைந்து இருப்பார்கள்.

மூன்று மாதங்களில் அனைத்து பிரசனைக்கும் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைதொகை கொடுக்கப்படும். ஆளுநர் என்று ஒருவர் உள்ளார். சட்டப்பேரவைக்கு வந்து செல்வதுதான் அவரது வேலை. தமிழ்தாய் வாழ்த்து, தமிழ்நாடு அவருக்கு பிடிக்காது.

சென்னையில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு தவறான விரும்பத்தாக சம்பவம் நடந்தது. முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரித்து தான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதலமைச்சர் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்கவிடமாட்டார் என்று பேசினார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow