55 மின்சார ரயில்கள் ரத்து.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எந்தெந்த வழித்தடங்கள்? முழு விவரம்!
Special Bus in Chennai : பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் இயக்கப்படும்
Special Buses In Chennai
அதாவது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு காலை 9.40 மணி முதல் மதியம் 12.50 வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும், இரவு 7.19 முதல் இரவு 11.59 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்களும் நாளை முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
இதேபோல் மறுமார்க்கமாக மறுமார்க்கமாக மேற்கண்ட நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், இரவு 8.55 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் செங்கல்பட்டு-தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதே வேளையில் மின்சார ரயில் ரத்து(Electric Train) செய்யப்படும் நாட்களில் சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது மேற்கண்ட நாட்களில் காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, 12.10, 12.30, 12.50 மணிக்கும் மற்றும் இரவு 10.40, 11.05, 11.10, 11.59 மணிக்கு சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக வழக்கமான ரயில் ரத்து செய்யப்படும் நாட்களில், பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.20, 10.40, 11.00, 11.20, 11.40, 12.00, 12.20, 12.40, 1.00, 1.20, 1.40 மணிக்கும் மற்றும் இரவு 11.20, 11.55, 12.20, 12,.45 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மின்சார ரயில்கள் ரத்து(Chennai Electric Train Cancelled) செய்யப்படுவதால் பயணிகளின் நலன் கருதி, பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வரும் 23.07.2024 முதல் 14.08.2024 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நேரங்களில் பல்லாவரம் வழியாக கூடுவாஞ்சேரிக்கு தற்போது 60 பேருந்துகள் மூலம் 571 பயண நடைகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமான நிலையம் மெட்ரோ முதல் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 50 பெரிய பேருந்துகளை மா.போ.கழக இயக்க உள்ளது.
இதேபோல் பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் மற்றும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு 5 சிற்றுந்துகள் shuttle service ஆக இயக்க உள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?