இனி விராட் கோலியுடன் உறவா? உரசலா?.. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொன்ன 'அந்த' பதில்!

Head Coach Gautam Gambhir About Virat Kohli : ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கம்பீரும், விராட் கோலியும் ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் பாம்பும், கீரியுமாக இருந்து வந்தனர். சில போட்டிகளில் இருவருக்கும் இடையே வார்த்தைபோரும் நடந்தது.

Jul 22, 2024 - 16:28
Jul 22, 2024 - 17:10
 0
இனி விராட் கோலியுடன் உறவா? உரசலா?.. பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொன்ன 'அந்த' பதில்!
Head Coach Gautam Gambhir About Virat Kohli

Head Coach Gautam Gambhir About Virat Kohli : இந்திய அணி அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின்(Rahul Dravid) பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் வீரரும், பாஜகவின் முன்னாள் எம்பியுமான கவுதம் கம்பீர்(Gautam Gambhir) இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக(Indian Team Head Coach) நியமிக்கப்பட்டார்.

ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கவுதம் கம்பீர், இளம் வீரர்களை அனுசரித்து செல்வாரா? அவருக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே எந்த அளவு புரிந்துணர்வு இருக்கும்? என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பினார்கள். இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினார் கவுதம் கம்பீர்(Gautam Gambhir). ஆம்... அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஹர்திக் பாண்ட்யாவை டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து இறக்கி விட்டு, சூர்யகுமார் யாதவுக்கு(Suryakumar Yadav) கேப்டன் பொறுப்பை பரிசளித்தார்.

அத்துடன் சிஎஸ்கே வீரரும், இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், அபிஷேக் சர்மா ஆகியோரை அணியில் எடுக்காமல் முன்னாள் வீரர்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். இந்நிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், கவுதம் கம்பீர் ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் பொறுப்பில் இருந்து இறக்கியது ஏன்? என்பது குறித்து  கவுதம் கம்பீர் தெளிவான விளக்கம் அளித்தார். அப்போது அணியின் மூத்த வீரரான விராட் கோலிக்கும், உங்களுக்குமான உறவு இனி எப்படி இருக்கும்? என செய்தியாளர்களிடம் கம்பீரிடம் கேட்டனர்.

இதற்கு எந்தவித தயக்கமும் இன்றி, முகத்தில் புன்னகையை மலரவிட்டபடி பதில் அளித்த கவுதம் கம்பீர், ''விராட் கோலிக்கும், எனக்கும் நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இனி இந்த நட்புறவு தொடர்ந்து நீடிக்கும். யார் என்ன சொன்னாலும், 140 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்குவதே எங்கள் இருவரின் இலக்கு'' என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் விராட் கோலி(Virat Kohli) குறித்து கவுதம் கம்பீரிடம் இந்த கேள்வியை கேட்டதற்கான காரணம் ஐபிஎல் கிரிக்கெட் பார்த்த அனைவர்க்கும் தெரிந்திருக்கும். ஆக்ரோஷத்துக்கு பெயர்போன கம்பீரும், விராட் கோலியும் ஐபிஎல் கிரிக்கெட்(IPL Cricket) களத்தில் பாம்பும், கீரியுமாக இருந்து வந்தனர். கொல்கத்தா அணி(Kolkatta) ஆர்சிபியை(RCB) வெற்றி பெற்றால் கம்பீர் அளவுக்கு அதிகமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும், ஆர்சிபி அணி கொல்கத்தாவை வீழ்த்தினால் விராட் கோலி உச்சக்கட்டத்தில் துள்ளி குதிப்பதும் தொடர்ந்தது. 

சில போட்டிகளில் இருவருக்கும் இடையே வார்த்தைபோரும் நடந்தது. போட்டிகளுக்கு பிறகு இருவரும் கைகுலுப்பதையும் தவிர்த்து வந்தனர். இந்த சம்பவங்களை மனதில் வைத்தே செய்தியாளர்கள் மேற்கண்ட கேள்வியை கேட்டனர். தற்போது கம்பீர் அளித்த சூப்பர் பதில் மூலம் இந்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow