இந்தியா

Tata Curvv: இந்தியாவின் முதல் SUV-coupe... TATA-வின் அடுத்த சம்பவம்... என்ன ஸ்பெஷல்ன்னு பார்க்கலாமா?

TATA Curvv Coupe Model Launch in Indian Market : இந்திய மோட்டார் வாகன சந்தையில் டாடா நிறுவனத்தின் கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தும் டாடா, இந்தியாவின் முதல் எஸ்யூவி கூபே மாடலை களமிறக்க ரெடியாகிவிட்டது.

Tata Curvv: இந்தியாவின் முதல் SUV-coupe... TATA-வின் அடுத்த சம்பவம்... என்ன ஸ்பெஷல்ன்னு பார்க்கலாமா?
TATA Curvv Coupe Model Launch in Indian Market
TATA Curvv Coupe Model Launch in Indian Market : மஹேந்திரா நிறுவனத்தின் புதிய மாடலான XUV 3XO ஃபேஸ்லிஃப்ட் கார்கள் விரைவில் சந்தைக்கு வரவுள்ளன. இந்த மாடலுக்கு கடும் போட்டியாக டாடா நிறுவனத்தில் இருந்தும் தரமான கார் ஒன்று சந்தையில் களமிறங்கவுள்ளது. Curvv.ev, Curvv ICE என்ற பெயரில் விற்பனைக்கு வரும் இது, இந்தியாவின் முதல் எஸ்யூவி கூபே மாடல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்த மாடல் கார் பெட்ரோல், டீசர், எலெக்ட்ரிக் என மூன்று வெர்ஷனிலும் விற்பனைக்கு வரவுள்ளது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
  
டாடா நிறுவனத்தின் சக்ஸஸ்ஃபுல் மாடல்களான நெக்ஸான், ஹாரியர் கார்களின் ஸ்டைலை தழுவி தான் இந்த கர்வ் ரக காரும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. முதலில் எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமே கர்வ் வெளியாகவிருந்த நிலையில் அதன்பின்னரே பெட்ரோல், டீசல் மாடல்களையும் களமிறக்க டாடா நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி இந்த மூன்று வெர்ஷன் டாடா கர்வ் மாடல்களும் ஆகஸ்ட் 7ம் தேதி சந்தைக்கு வருகின்றன. காரின் முன்பக்கம் செம ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பிலிட் ஹெட்லைட்டில் எல்இடி டிஆர்எல் பொறுத்தப்பட்டுள்ளன. 

அதேபோல் எலெக்ட்ரிக் வெர்ஷன் மாடலில் மட்டும், பிளாங்கான அதாவது டிசைன் இல்லாமல் தட்டையான கிரில் வடிமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் என்ஜின் வெர்ஷனில் ரெகுலராக வரும் மெஷ் பேட்டர்ன் கிரில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பக்கவாட்டில் ஸ்லோஃப்பான ரூஃப் லைன் கொடுக்கப்பட்டுள்ளதால், கூபே வடிவ காரான கர்வ் பார்ப்பதற்கு செம ரிச்சாக காணப்படுகிறது. அனைத்து மாடல்களிலும் அலாய் வீல் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளதோடு, பிளாஸ் டைப் டோர் ஹேண்டில்களும் பொறுத்தப்பட்டுள்ளன. டாடா ரக கார்களில் முதன்முறையாக பிளாஸ் டைப் டோர் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
டாடா கர்வ் காரின் பின்பக்க பம்பரும் எல்இடி பார் டெயில் லைட்டுகளும் உயரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் டேஷ் போர்டில் கிளாஸிக் லுக்கை எதிர்பார்த்த வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நெக்ஸான் காரின் அதே டேஷ்போர்ட் மாடல் தான் கர்வ் கூபே காரிலும் பொறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஃப்ரீ ஃப்ளோட்டிங் 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன், இன்ஃபோயின்மென்ட் சிஸ்டம், அதன் கீழே ஏசி வெண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரம் ஸ்டீயரிங் வீல் செம ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நெக்ஸான் மாடலில் வரும் அதே ஸ்டைல் கியர் பாக்ஸ், பானரோமிக் சன்ரூஃப், வெண்டிலேட்டட் முன்பக்க சீட்டுகள், டூயல் ஸோன் டச் கண்ட்ரோல் ஆட்டோமெடிக் ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜர் ஆகிய அம்சங்கள் இடம்பெறுகின்றன. மேலும் 6 ஏர் பேக்ஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, அடாஸ் டெக்னாலஜி, அடாப்டிங் க்ரூஸ் கண்ட்ரோல், முன்பக்க கொலிஷன் வார்னிங் என கலக்கலாக களமிறங்குகிறது கர்வ் கூபே. மேலும், பெட்ரோல் வெர்ஷனில் 1.2 லிட்டர் இன்ஜினும், டீசல் வெர்ஷனில் 1.5 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் இன்ஜினில் 125 பிஎஸ் பவரும், 225 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாகவும், இது 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உடன் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
 
டீசல் இன்ஜின் வெர்ஷனில், 115 பிஎஸ் பவரும், 260 என்எம் டார்க் திறனோடு, 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் வெளியாகவுள்ளதாக தெரிகிறது. அதேபோல், எலெக்ட்ரிக் வெர்ஷன் காரில், டாடா வழக்கம்போல இரண்டு விதமான பேட்டரி பேக்அப் (ஸ்டாண்டர்டு ரேஞ்ச், லாங் ரேஞ்ச்) ஆப்ஷன் கொடுக்கவுள்ளதாம். இதில் லாங் ரேஞ்ச் பேட்டரி வெர்ஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை பயணம் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா கூபே மாடல் கார்களின் விலை 10.5 முதல் 20 லட்சம் ரூபாய் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.