Suriya 44: விஜய்யின் GOAT ஸ்டைலில் சூர்யா 44... செம மாஸ் அப்டேட் ரெடி... என்னன்னு தெரியுமா..?

Actor Surya Birthday Special : சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 44வது(Surya 44 Update) படமான இதன் அப்டேட் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு வெளியாகவுள்ளது.

Jul 22, 2024 - 17:34
Jul 22, 2024 - 18:08
 0
Suriya 44: விஜய்யின் GOAT ஸ்டைலில் சூர்யா 44... செம மாஸ் அப்டேட் ரெடி... என்னன்னு தெரியுமா..?
Actor Suriya 44 Movie Update
Actor Surya Birthday Special: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா, நாளை தனது 49வது பிறந்தநாளை(Surya 49th Birthday) கொண்டாடுகிறார். இதனால் கங்குவா, சூர்யா 44 படங்களின் அப்டேட்களுக்காக அவரது ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான(Kanguva First Single) ஃபயர் சாங் பற்றி படக்குழு அறிவித்துவிட்டது. அதன்படி கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. இன்னொரு பக்கம் அவரது சூர்யா 44 படத்தின் அப்டேட்(Surya 44 Update) வருமா வராதா என்ற எதிர்பார்ப்பும் காணப்பட்டது. 
 
கங்குவா படப்பிடிப்பை முடிந்ததும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. இப்படத்தின் டைட்டில் புறநானுறு என அறிவித்த படக்குழு, சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், விஜய் வர்மா ஆகியோர் நடிப்பதையும் கன்ஃபார்ம் செய்தது. ஆனால், திடீரென இந்தப் படத்தை ட்ராப் செய்த சூர்யா, கார்த்திக் சுப்புராஜ்ஜுடன் கூட்டணி வைத்தார். விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என தகவல்கள் வைரலாகி வந்த நிலையில், அவரோ சூர்யாவுக்கு கதை சொல்லி படப்பிடிப்புக்கே சென்றுவிட்டார். அதன்படி சூர்யா 44 முதற்கட்ட படப்பிடிப்பு(Surya 44 Shooting) சில தினங்களுக்கு முன்னர் அந்தமானில் தொடங்கியது. 
 
சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம் ஆகியோரும் நடிக்கவுள்ள நிலையில், சந்தோஷ் நாராயணன்(Santhosh Narayanan) இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் ஷார்ட்டை ஜூன் 2ம் தேதி வெளியிட்டார் கார்த்திக் சுப்புராஜ்(Karthik Subbaraj). அதில், ஸ்டைலிஷான French Beard, பங்க் ஹேர்ஸ்டைல் என ரெட்ரோ லுக்கில் மெர்சல் காட்டினார் சூர்யா. இதனால் சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜ்ஜும் இணைந்து தரமான ஆக்ஷன் ட்ரீட் கொடுக்க ரெடியாகிவிட்டதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவந்தனர். இந்நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட ரெடியாகிவிட்டது படக்குழு. 

அதன்படி, சூர்யா 44 படத்தின் அப்டேட்(Surya 44 Update) நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் அப்டேட் கொடுக்க முடிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். விஜய்யின் தி கோட் படத்தில் இருந்து விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மாஸ் காட்டியது. அதேபோல் சூர்யா 44 படத்தின் அப்டேட்டை நள்ளிரவு 12.12 மணிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், கங்குவா கிளிம்ப்ஸ் வீடியோவும் கடந்தாண்டு சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், நள்ளிரவு வெளியாகும் சூர்யா 44 அப்டேட், இந்தப் படத்தின் டைட்டிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் லுக் & கெட்டப் ஏற்கனவே வெளியாகிவிட்டதால், இனி டைட்டில் தான் ரிலீஸாக வேண்டியது உள்ளது. எனவே சூர்யா ரசிகர்களுக்கு நள்ளிரவில் தரமான ட்ரீட் காத்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow