சட்டவிரோதமாக வீட்டை இடித்த வழக்கு: நடிகை கவுதமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடுக்கோரி வழக்கு தொடர அனுமதிக்கோரி நாச்சாள் என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து அதிமுக நிர்வாகியும் நடிகையுமான கவுதமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாச்சாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அதில், நீலாங்கரையில் கவுதமியுடன் இணந்து நிலம் ஒன்றை வாங்கி பின்னர் அதனை இருவரும் பிரித்துக்கொண்ட்தாக கூறியுள்ளார்.
பின்னர் தனக்கான நிலத்தில் தான் வீடு கட்டியதாகவும் கட்டுமானப் பணிகள் 90% சதவீதம் நிறைவடைந்த நிலையில் தங்களுக்கு எதிராக கவுதமி அளித்த பொய் புகாரில் தாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியில் முறையாக அனுமதி வாங்கி கட்டுமானப் பணி மேற்கொண்ட நிலையில் அனுமதியை மீறி கட்டுமான மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கவுதமி அளித்த புகாரில் மாநகராட்சி தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?