நாக சைதன்யா 2வது திருமணம் செய்ததால் பொறாமையா? சமந்தா ஓபன் டாக்!

சமந்தா PAN இந்தியா ஸ்டாராக கெத்து காட்டி வந்தாலும், நாக சைதன்யா பிரிவு, தந்தையின் மறைவு, மயோசிடிஸ் பாதிப்பு என பல சோதனைகளை சந்தித்துள்ளார். இந்நிலையில், நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது குறித்து சமந்தா சொன்ன ஸ்டேட்மெண்ட் வைரலாகி வருகிறது.

Feb 6, 2025 - 20:30
Feb 6, 2025 - 20:44
 0
நாக சைதன்யா 2வது திருமணம் செய்ததால் பொறாமையா? சமந்தா ஓபன் டாக்!
நடிகை சமந்தா

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சமந்தா, கோலிவுட், டோலிவுட்டை கடந்து தற்போது பாலிவுட்டையும் அசரடித்து வருகிறார். சினிமா, வெப் சீரிஸ் என எந்தப் பக்கம் சென்றாலும் சமந்தாவின் சாம்ராஜ்யம் தான். அதிலும் இப்போதெல்லாம் சமந்தா அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க யாரும் கிடையாது என, ரசிகர்கள் அவரை கனவுக் கன்னியாக கொண்டாடி வருகின்றனர். இப்படி கேரியரில் சமந்தாவின் அசுர வளர்ச்சி யாருமே நினைத்துப் பார்க்க முடியாது என்றாலும், சொந்த வாழ்க்கையில் துயரங்கள் மட்டும் அன்லிமிடெட்டாக உள்ளன.

நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தா, கடந்த 2021ம் ஆண்டு அவரை பிரிந்தார். இருவருமே பரஸ்பரமாக விவாகரத்து செய்துகொண்டாலும், இதற்கான காரணம் மட்டும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. சமந்தா சினிமாவில் நடிக்கக் கூடாது, அப்படியே நடித்தாலும் கவர்ச்சி காட்டக் கூடாது என, நாக சைதன்யா கண்டிஷன் மேல் கண்டிஷன் போட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல், நாக சைதன்யா மீதும் சில குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்தாண்டு நடிகை சோபிதா துலிபலாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் நாக சைதன்யா. இந்த திருமணம் ஊரறிய பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

அதேநேரம், சமந்தாவின் தந்தை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். முன்னதாக மயோசிடிஸ் பாதிப்பு காரணமாக சமந்தா பல நாட்கள் ஓய்வெடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றிப் பெறவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் கொடுத்த பேட்டியில், நாக சைதன்யா – சோபிதா துலிபலா திருமணம் குறித்து சமந்தா பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அதாவது நாக சைதன்யா தன்னை பிரிந்து சோபிதாவை திருமணம் செய்துகொண்டதில் எனக்கு பொறாமை இல்லை. நான் எப்போதும் விலகி இருப்பது பொறாமையிடம் இருந்து மட்டும் தான், அதுவே எல்லா மோசமான விஷயங்களுக்கும் வேர் எனக் கூறியுள்ளார். அதேபோல், பெண்கள் திருமணம் செய்வது, குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்காக மட்டும் தான் என நினைக்கின்றனர். ஆனால், அது உண்மையில்லை, பெண் தனியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என, நெற்றிப் பொட்டில் அடித்தார் போல கூறியுள்ளார். இதன்மூலம், நாக சைதன்யா பிரிந்து போனாலும், எனக்கு நானே ராஜா நானே மந்திரி என ஜாலியாக தான் இருக்கிறேன், என சொல்லாமல் சொல்லியுள்ளார் சமந்தா.     

நாக சைதன்யா – சோபிதா துலிபலா திருமணம் நடந்தபோது, ரசிகர்கள் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தற்போது சமந்தா தனது பேட்டியில் பேசியிருப்பதை பார்த்தால், நாக சைதன்யாவுக்கு கொடுத்து வைக்கவில்லை என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow