அஜித்தின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியா..? வீண் முயற்சியா..? ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ்!
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம், பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இது அஜித்தின் மாஸ் சம்பவமா? அல்லது ஏமாற்றமா என்பதை இப்போது பார்க்கலாம்....
![அஜித்தின் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியா..? வீண் முயற்சியா..? ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ்!](https://kumudamnews.com/uploads/images/202502/image_870x_67a4c9242183b.jpg)
அஜித்தின் 62வது படமாக உருவாகியுள்ள விடாமுயற்சி, பல தடைகளை கடந்து திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரித்துள்ள இந்தப் படம், ஹாலிவுட் மூவியான பிரேக்டவுன் படத்தின் தழுவல் என சொல்லப்பட்டது. ஆனால், சத்தியமாக இது பிரேக்டவுன் ரீமேக் இல்லை எனவும், விடாமுயற்சி கதையை செலக்ட் செய்தது அஜித் தான் என்றும் மகிழ் திருமேனி கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது வெளியான விடாமுயற்சி படத்துக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன், இது பிரேக்டவுன் ரீமேக் தான் என்பதை உறுதி செய்துள்ளது.
அஜித் ரசிகர்கள் வழக்கம்போல தங்களது ஹீரோவை விட்டுக்கொடுக்காமல், விடாமுயற்சி தரமான சம்பவம் என உற்சாக கூச்சலிட்டு வருகின்றனர். அஜித்துக்கு மாஸ் என்ட்ரி இல்லையென்றாலும், அவரை ஸ்க்ரீனில் பார்ப்பதே செம மாஸ் தான் என மஜா செய்து வருகின்றனர் ரசிகர்கள்... அதேபோல், அஜித் – த்ரிஷா கெமிஸ்ட்ரி க்யூட்டாக இருப்பதாகவும், ஆனால், ஆக்டிங்கில் சம்பவம் செய்தது என்னவோ ரெஜினா தான் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். முக்கியமாக அஜித், ரெஜினா இருவருக்குமான ஃபைட், அஜித் – அர்ஜுன் மோதும் ஆக்ஷன் சீக்வென்ஸ் எல்லாம் வேற லெவல் என ராக்கெட் விட்டு வருகின்றனர் ஏ.கே.வின் ரசிகர்கள்....
அதேபோல், வழக்கமாக கார் சேஸிங் காட்சிகளில் அஜித் கெத்து காட்ட, அனிருத் தாறுமாறாக பிஜிஎம் போட்டு மிரள வைத்துள்ளதாகவும் ரசிகர்கள் கூஸ்பம்ஸ் செய்து வருகின்றனர். இப்படி விடாமுயற்சி படத்தை அஜித் ரசிகர்கள் தாறுமாறு தக்காளிச் சோறு என கொண்டாடி வந்தாலும், விடாமுயற்சி வீண் முயற்சி எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தனது மனைவி த்ரிஷா காணாமல் போக, அவரை அஜித் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை. அப்படியே பிரேக்டவுன் படத்தை சுட்டு, விடாமுயற்சியை எடுத்துள்ளனர் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
அஜித்துக்கு மாஸ் ஓபனிங், பஞ்ச் டயலாக் என மாஸ் ஹீரோயிஷம் எதுவும் இல்லாமல் விடாமுயற்சி உருவாகியுள்ளது. இப்படியொரு கதையில் அஜித் நடிக்க வேண்டிய அவசியமே இல்லை, அதுமட்டுமல்லாமல் திரைக்கதை மெதுவாக நகர்வதால் கொஞ்சம் போரிங்காக இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதேநேரம், மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் இருப்பதால், அஜித் ரசிகர்களுக்கு இது ஓகே ரகமான படம் என்றும் விமர்சித்துள்ளனர். ஒருபக்கம் மங்காத்தா அளவுக்கு விடாமுயற்சி இருப்பதாக கமெண்ட்ஸ்கள் பறக்க, சத்தியமா இது மங்காத்தா படத்துடன் கம்பேர் பண்ணவே முடியாது என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்-ஐ வைத்துப் பார்த்தால், விடாமுயற்சி வீண் முயற்ச்சியாக இருந்தாலும், அஜித் ரசிகர்களுக்கு மட்டும் கொண்டாட்டம் என தெரிகிறது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)