டிரம்பின் அதிரடி உத்தரவு.. நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. மோடி ரியாக்‌ஷன் என்ன?

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க  ராணுவ விமானம் சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டு உள்ள நிலையில் இதற்கு பிரதமர் மோடியின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Feb 4, 2025 - 16:46
 0
டிரம்பின் அதிரடி உத்தரவு.. நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. மோடி ரியாக்‌ஷன் என்ன?
நரேந்திர மோடி-டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.

இதையடுத்து,  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், “சட்டவிரோதமாக அமெரிக்காவில்  குடியேறியவர்கள் தொடர்பாக மோடியுடன் விவாதித்து வருவதாக தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி மாதம் அமெரிக்கா வர வாய்ப்புள்ளது என தெரிவித்த அவர், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து பிரதமர் மோடி சரியானதைச் செய்வார்” என்று கூறினார்.

இந்நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க  ராணுவ விமானம் இன்று (பிப். 4) அதிகாலை சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டு உள்ளது. இவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா வந்தடைவார்கள் என்று கூறப்படுகிறது. C-17 என்ற விமானம் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நடவடிக்கையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி எப்படி எடுத்துக் கொள்வார்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அமெரிக்காவில் கொலம்பியா, மெக்சிகோ, இந்தியா நாட்டைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் ஆவணங்கள் இன்றி குடியேறி உள்ளனர். மேலும், அமெரிக்காவில் உள்ள கொலம்பியா மக்களை வெளியேற்றுவதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக தான் அதிபர் டிரம்ப்,  கொலம்பியா நாடு மீது கூடுதல் வரிகளை விதித்து பின்னர் அதை நிறுத்தி வைத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி உள்ளவர்களை நாடு கடத்துவேன் என்றும் அமெரிக்காவை அமெரிக்கர்களுக்கு உரியதாக மாற்றுவேன் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow