திருப்பதியில் இலவச உணவுடன் பக்தர்களுக்கு மசால்வடை..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி முதல் பக்தர்களுக்கு இலவச சாப்பாட்டுடன், பூண்டு, வெங்காயம் இல்லாத மசால் வடை வழங்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Jan 21, 2025 - 15:27
 0
திருப்பதியில் இலவச உணவுடன் பக்தர்களுக்கு மசால்வடை..!
திருப்பதியில் இலவச உணவுடன் பக்தர்களுக்கு மசால்வடை..!

திருப்பதி மலையில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச சாப்பாட்டுடன் பிப்ரவரி 4ஆம் தேதி ரதசப்தமி அன்று முதல் மசால் வடையும் வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான சோதனை முயற்சியாக நேற்று 5 ஆயிரம் பக்தர்களுக்கு சாப்பாட்டுடன் மசால் வடை பரிமாறப்பட்டது.

சம்பிரதாய அடிப்படையில் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சேர்க்காமல் மசால் வடைகள் அன்னதான சமையல் கூடத்தில் தயார் செய்யப்பட்டு சோதனை முயற்சியாக பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.

பூண்டு, வெங்காயம் ஆகியவை சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட மசால் வடை சுவையாக இருப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே திருப்பதி தேவஸ்தானம் ரதசப்தமி நாள் முதல் பக்தர்களுக்கு மசால் வடையுடன் சாப்பாடு வழங்க முடிவு செய்துள்ளது.

பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் தேவைக்கு ஏற்ற வகையில் தினமும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட  மசால்வடைகள் தேவஸ்தான உணவு தயாரிப்பு கூடத்தில் தயார் செய்யப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் சுவையான அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. திருமலையில் உள்ள மாத்ரு ஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத கூட்டத்தில் ஒரே நேரத்தில் நான்காயிரம் பக்தர்கள் உணவு அருந்தும் விதமாக உள்ள நிலையில் இங்கு பக்தர்களுக்கு வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், சட்னி, சர்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக பரிமாரப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் மேலும் ஒரு பிரசாதத்தை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.  

திருப்பதி வெங்காயம், பூண்டு இல்லாமல் மசால் வடைகளை தயாரித்து சோதனை முறையில்  5,000 பக்தர்களுக்கு மசாலா வடைகளை இன்று வழங்கியது. மசாலா வடைகள் சுவையாக இருந்ததாக பக்தர்கள் திருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து, பிப்ரவரி 4 ஆம் தேதி ரத சப்தமி அன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் வழங்க  தேவஸ்தானம் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow