பிப்ரவரி 13-ல் பொதுத்தேர்வு ஆலோசனைக் கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பொதுத்தேர்வு தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Feb 5, 2025 - 13:57
 0
பிப்ரவரி 13-ல் பொதுத்தேர்வு ஆலோசனைக் கூட்டம்- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பெண் கல்வியை மேம்படுத்தும் விதமாக மாணவிகளுக்கு கல்வி உதவிதொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கினார்.

2024 - 2025 ஆம் கல்வியாண்டில் இந்தியாவில் கல்வி உதவித்தொகை திட்டம் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்வியை ஆதரிப்பதற்காக 16 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 446 அரசு பள்ளியில் பயிலும் மூன்றாயிரத்து 511 மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக 2 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் தகுதியான 797 மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, 4 லட்சத்து 20 ஆயிரம்  மாணவிகள் புதுமை பெண் திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர். கூடுதலாக 75 ஆயிரம் பெண்கள் பயன் அடைய உள்ளனர். உயர்கல்வியில் பெண்களுக்கான வாய்ப்பு திட்டமாக உள்ள கல்லூரி கனவு திட்டம் மூலம் பிளஸ் ஒன் மாணவர்கள்களை கல்லூரிக்கு அழைத்து சென்று கல்லூரி வளாகம் வகுப்பு அறைக்கு அழைத்து சென்று காட்டுகிறோம்.

பிளஸ் டூ முடித்து வேலகை்கு செல்லாமல் கல்லூரிக்கு  மாணவிகள் செல்ல வேண்டும். நம்ம ஊர் நம்ம பள்ளி திட்டத்தின் போது ஐந்து லட்சம் முதல்வர் கொடுத்தார். CSIR கார்பேரேட் சமுக பங்களிப்பு நிதியின் கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024 டிசம்பர் வரை 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி வந்துள்ளது. அரசின் மீதும் கல்வித்துறை மீதும் நம்பிக்கை வைத்துள்ளன் காரணமாக இந்த நிதி கிடைத்துள்ளது.

தான் படித்த பள்ளிக்கு எதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் பள்ளிகளில் பாடம் நடத்தலாம் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை கற்பிக்கலாம் என தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 22 ஆயிரத்து 930 தொடக்க பள்ளிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். அது 500 ரூபாயாக இருக்கலாம் அல்லது ஒரு பென்சில் அல்லது ரப்பர் என எதுவாக வேண்டுமாலும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, மலபார் குழுமம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவி தொகை வழங்கப்படும். 797 பேருக்கு முதல் கட்டமாக உதவித்தொகை வழங்கி இருக்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மூன்றாயிரத்து 511 மாணவியர்கள்  பயன் பெறுகிறார்கள் என தெரிவித்தார்.

2.80 கோடி ரூபாய் உதவி தொகையில் சென்னையில் 797 மாணவியர்களுக்கு 70 லட்சம் ரூபாய் உதவிதொகை வழங்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு சம்மந்தமாக பிப்ரவரி 13 -ஆம் தேதி மாவட்ட பள்ளி கல்வி முதன்மை அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

பட்ஜெட்டை பொருத்தவரை தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் அதனை கண்டித்து திமுக கண்டண ஆர்பாட்டம் மேற்கொள்ள உள்ளது எனவும் கூறினார். பெரியார் பற்றிய விமர்சனம் குறித்தான கேள்விக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் போல் தானும் அது குறித்து பதில் அளிக்க விரும்பவில்லை என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow