சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை.. இன்ஸ்டா பிரபலம் திவ்யா கள்ளச்சி உட்பட 4 பேர் கைது
இரண்டு சிறுவர்களை திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஆனந்த் மற்றும் கார்த்தி ஆகிய 4 பேரும் பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்ததாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கு முன்பு அந்த செயலி மூலம் பலரும் பிரபலமானார்கள். அப்படி பிரபலமானவர்களில் ஒருவர் தான் திவ்யா கள்ளச்சி. ’கார்த்தி மாமா’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பேசி பிரபலமானார். அதாவது, கார்த்திக் என்பவர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக அழுது, புலம்பி வீடியோ வெளியிடுவார்.
டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர் ‘கார்த்தி மாமா’-வின் புராண கதை வீடியோக்களை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்து வருகிறார். இவர் அவ்வப்போது திருமணம் செய்துவிட்டேன், கர்ப்பமாக இருக்கிறேன் என்று வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியடைய செய்வார்.
பின்னர் அந்த வீடியோக்கள் நிஜமில்லை என்றும் அதை தான் கண்டெண்டிற்காக மட்டும் தான் செய்தேன் என்றும் கூறுவார். பல யூடியூபர்கள் தங்கள் சேனல்களின் புரொமோஷனுக்காக இவரை அணுகுவதாக கூறப்படுகிறது. இவரது வீடியோக்கள் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் சமீபத்தில் Makkal Paarvai Educational & charitable trust(SSG) என்னும் யூடியூப் சேனல் நடத்திவரும் சித்ரா என்பவர், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், யூடியூபரான திவ்யா கள்ளச்சி என்பவர் மீது ஆபாசக் குற்றச்சாட்டுகளை புகாராக அடுக்கினார்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் திவ்யா கள்ளச்சி என்ற youtuber சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக சித்ரா தெரிவித்து இருந்தார்.
அதாவது, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை திவ்யா கள்ளச்சி, சித்ரா, ஆனந்த் மற்றும் கார்த்தி ஆகிய 4 பேரும் பாலியல் சீண்டலில் ஈடுபட வைத்ததாகவும், அதனை படம்பிடித்து அதன் மூலம் பணம் திரட்ட முயற்சித்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தற்போது நான்கு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் மீது போக்சோ உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?