Rajinikanth: மீண்டும் இணையும் தளபதி கூட்டணி... ரஜினி, மணிரத்னம் காம்போவில் தலைவர் 172..?

Rajinikanth Maniratnam Combo : கூலி படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதன்பின்னர் இயக்குநர் மணிரத்னம் உடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Oct 5, 2024 - 23:17
Oct 5, 2024 - 23:44
 0
Rajinikanth: மீண்டும் இணையும் தளபதி கூட்டணி... ரஜினி, மணிரத்னம் காம்போவில் தலைவர் 172..?
மீண்டும் இணையும் ரஜினி - மணிரத்னம்

Rajinikanth Maniratnam Combo : சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரஜினி நடிக்கும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் கூலி ஷூட்டிங், 50 சதவீதம் முடிந்துவிட்டது. இரு தினங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினி, இந்த மாதம் 15ம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், ரஜினியின் அடுத்தப் படம் குறித்து தரமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

ரஜினியின் தலைவர் 172 படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், தற்போதைய அப்டேட் படி ரஜினியும் இயக்குநர் மணிரத்னமும் மீண்டும் இணையவிருப்பதாக சொல்லப்படுகிறது. பொன்னியின் செல்வனுக்குப் பின்னர் கமலுடன் இணைந்த மணிரத்னம், தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தக் லைஃப் ஷூட்டிங் முடிவுக்கு வந்துவிட்டதை அடுத்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் மணிரத்னம்.

இதனையடுத்து இந்தப் படத்தை அடுத்தாண்டு பொங்கல் அல்லது மார்ச் மாதம் ரிலீச் செய்ய மணிரத்னம் பிளான் செய்து வருகிறார். அதேபோல் ரஜினியின் கூலி படப்பிடிப்பும் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் எனத் தெரிகிறது. இதனால் ரஜினிகாந்த் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளதாம். தக் லைஃப் அப்டேட் வெளியாகும் முன்பே, ரஜினிக்கு மணிரத்னம் கதை கூறியிருந்ததாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி பற்றிய அப்டேட் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – மணிரத்னம் கூட்டணியில் 1971ம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம், இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. கேங்ஸ்டர் ஜானரில் வெளியான இந்தப் படத்தில், ரஜினியும் மம்முட்டியும் நண்பர்களாக நடித்திருந்தனர். இன்னொரு பக்கம் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் தளபதி படத்தை வேற லெவலுக்கு கொண்டு சேர்த்தது. அதன்பின்னர் மணிரத்னம் – இளையராஜா கூட்டணியும் இணையவில்லை, ரஜினியும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவில்லை. 

இந்நிலையில், 33 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக ரஜினியும் மணிரத்னமும் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அபிஸியல் அப்டேட் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நாயகன் வெளியாகி 35 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி தக் லைஃப் படத்தில் இணைந்தனர். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரஜினியும் கமலும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow