Demonte Colony 2 Box Office Collection : டிமான்டி காலனி 2 முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
Demonte Colony 2 Box Office Collection : அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிமான்டி காலனி 2ம் பாகம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Demonte Colony 2 Box Office Collection : டிமான்டி காலனி முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்திலும் அருள்நிதியே ஹீரோவாக நடிக்க, பிரியா பவானி சங்கர் அவருக்கு ஜோடியானார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடைசியாக வெளியான கோப்ரா எதிர்பார்த்தபடி ஹிட்டாகவில்லை. சீயான் விக்ரம் நடிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படம் நெகட்டிவான விமர்சனங்களுடன் படுதோல்வியடைந்தது. இதற்கு தயாரிப்பு நிறுவனம் தான் காரணம் எனவும், அவர்கள் சொன்ன கதையை படமாக எடுத்ததால் தான் இப்படியானதாகவும் அஜய் ஞானமுத்து கூறியிருந்தார்.
இதனால், கோப்ரா தோல்வியில் இருந்து கம்பேக் கொடுக்கும் விதமாக டிமான்டி காலனி 2ம்(Demonte Colony 2) பாகத்தை இயக்கி வந்தார் அஜய் ஞானமுத்து. 2015ம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் வெளியான சிறந்த ஹாரர் த்ரில்லர் படங்களில் டிமான்டி காலனியும் ஒன்று என ரசிகர்கள் இப்போது பாராட்டி வருகின்றனர். அருள்நிதி, ரமேஷ் திலக், எம்.எஸ் பாஸ்கர், அபிஷேக் ஜோசப் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக டிமான்டி காலனி 2ம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.
அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிமான்டி காலனி 2ம் பாகத்துக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. முதல் பாகம் போலவே டிமான்டி காலனி 2-வும் ஹாரர் ஜானர் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதாவது 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் 6ம் தேதி ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடக்கிறது. அது என்ன சம்பவம், அதனை அருள்நிதியும் ப்ரியா பவானி சங்கரும் தடுத்தார்களா என்பது தான் டிமான்டி காலனி 2ம் பாகத்தின் கதை. அதேபோல், இரண்டம் பாதி முழுக்க ஒரு சீன உணவகத்தின் பின்னணியில் பல திருப்பங்களுடன் நடப்பது புது அனுபவமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறியிருந்தனர்.
வழக்கமான பேய் படங்களைப் போல இல்லாமல், பரபரப்பாகவும் விறுவிறுப்புடனும் புதிய கதை களத்தில் நகர்வதால் டிமான்டி காலனி 2ம் பாகத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், நேற்று வெளியான படங்களில் தங்கலானுக்குப் பின்னர் டிமான்டி காலனி 2ம்(Demonte Colony 2 Movie) பாகம் பார்க்க தான் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் டிமான்டி காலனி 2ம் பாகம் முதல் நாளில் 3.5 கோடி முதல் 5 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க - தங்கலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!
இதனை தொடர்ந்து மேலும் 3 நாட்கள் விடுமுறை தினம் என்பதால், டிமான்டி காலனி 2ம் பாகத்தின் வசூல்(Demonte Colony 2 Box Office Collection) மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் 13 முதல் 15 கோடி ரூபாய் வரை வசூல்(Thangalaan Box Office Collection) செய்துள்ள நிலையில், அதற்கு அடுத்த இடத்தை டிமான்டி காலனி 2ம் பாகம் பிடித்துள்ளது. கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் முதல் நாளில் 1 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?