Ajith Bike Tour : ”சாதியும் மதமும் மனிதனை வெறுக்க வைக்கும்... பைக் டூர் இதுக்காக தான்” அஜித்தின் வைரல் வீடியோ!

Actor Ajith Kumar Bike Tour : தமிழில் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், அடிக்கடி பைக் டூர் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுகுறித்து அஜித் விளக்கம் கொடுத்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Oct 5, 2024 - 21:25
Oct 5, 2024 - 22:27
 0
Ajith Bike Tour : ”சாதியும் மதமும் மனிதனை வெறுக்க வைக்கும்... பைக் டூர் இதுக்காக தான்” அஜித்தின் வைரல் வீடியோ!
சாதியும் மதமும் மனிதனை வெறுக்க வைக்கும் - அஜித்

Actor Ajith Kumar Bike Tour : ரசிகர்களால் தல என கொண்டாடப்படும் அஜித்குமார், நடிகராக மட்டுமில்லாமல் சகலகலா வல்லவனாக மாஸ் காட்டி வருகிறார். பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் தயாரிப்பு என தனக்கு பிடித்த எல்லா துறைகளிலும் தடம் பதித்து வருகிறார். தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் நடித்து வரும் அஜித், அடிக்கடி பைக் டூர் செல்வதிலும் பிஸியாக உள்ளார். உலகம் முழுவதும் பைக் டூர் செல்ல வேண்டும் என்பது அஜித்தின் மிகப் பெரிய கனவுகளில் ஒன்று.

கடந்தாண்டு இந்தியா, நேபாளம் உட்பட பல பகுதிகளுக்கு பைக் ட்ரிப் சென்று வந்தார். அஜித் பைக் டூர் சென்ற போட்டோஸ், வீடியோக்களில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. அதேபோல் அஜித்தின் பைக் டூர் சில நேரங்களில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டும் வந்தன. அஜித் எதற்காக பைக் ட்ரிப் செல்கிறார்? படங்களில் நடித்து சம்பாதிப்பது இப்படி பைக் டூர் செல்வதற்கு தானா எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், ட்ராவல் செய்வது குறித்து அஜித் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் பேசியுள்ள அஜித், மதமும் சாதியும் மக்களை வெறுக்க வைக்கும். ஆனால் அவர்களை சந்தித்த பிறகு அது மாறும் என கூறியுள்ளார். அதேபோல், மதம், இனத்தை வைத்து நாம் ஒரு முடிவோடு இருக்கிறோம், ஆனால் நேரில் சந்தித்த பின்னர் தான் அவர்களின் உண்மை நிலை என்னவென்று தெரியும். ஒரு பயணம் அங்குள்ள மக்களை பற்றி அறிந்துகொள்வது மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள உதவும். பயணங்கள் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடிவும். மேலும், இதுபோன்ற பயணங்கள் தான் ஒரு சாதரண நபரை, சிறந்த மனிதராக மாற்றும் என்றும் அஜித் தனது அனுபவத்தை ஷேர் செய்துள்ளார்.

அஜித்தின் இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அஜித் சொல்வது முற்றிலும் உண்மை தான் என்றும், மனிதர்களை சந்திக்காமலேயே நாம் அவர்களை பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், அஜித்தின் இந்த வீடியோவை நடிகர் ஆரவ் மட்டுமின்றி, ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த வீடியோ எல்லாம் ஓகே தான், ஆனால் விடாமுயற்சி அப்டேட் எப்ப வரும் என கேட்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ட்ராம்ப்பிடம் விடாமுயற்சி அப்டேட் சொன்னால், உங்களுக்கு ஓட்டுப் போடுவோம் என அஜித் ரசிகர்கள் கூறியிருந்தனர். கடந்த இரு தினங்களாக இது வைரலாகி வந்த நிலையில், தற்போது அஜித்தின் வீடியோவும் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow