பொன்னியின் செல்வனுக்கு தேசிய விருது.. ஆதித்த கரிகாலன், பழுவேட்டரையர் வாழ்த்து..

பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து, அதில் நடித்த நடிகர்களான விக்ரம் மற்றும் சரத்குமார் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Aug 16, 2024 - 21:17
Aug 17, 2024 - 09:50
 0
பொன்னியின் செல்வனுக்கு தேசிய விருது.. ஆதித்த கரிகாலன், பழுவேட்டரையர் வாழ்த்து..
பொன்னியின் செல்வன்1 க்கு விருது - விக்ரம், சரத்குமார் மகிழ்ச்சி

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், தமிழ் இலக்கிய வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட, வாசித்துவரும் நாவலாக இன்றளவும் உள்ளது. ஐந்து பாகங்களைக் கொண்ட இந்த நாவலானது, இராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்ட அருள்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது.

பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுப்பதற்காக, எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் உள்ளிட்ட எண்ணற்ற திரைத்துறை பிரபலங்கள் முயற்சித்து பார்த்தனர். 1958-ம் ஆண்டு, எம்.ஜி.ஆர், 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து `பொன்னியின் செல்வன்' கதையின் உரிமையைப் பெற்றார். எஸ்.எம்.சுப்பையா இசையமைப்பதாகவும் இருந்தது. அதற்கான போஸ்டரும் கூட வெளியிடப்பட்டது. இதற்கிடையில், எம்.ஜி.ஆர். விபத்தில் சிக்கிக்கொள்ள திரைப்படம் கைவிடப்பட்டது.

மேலும் படிக்க: இதயங்களை கொள்ளையடித்த எதிர்வீட்டு ‘ஷோபனா'.. நித்யா மேனனுக்கு தேசிய விருது..

1999-ம் ஆண்டு, மேஜிக் லேன்டர்ன் நாடகக் குழு, பொன்னியின் செல்வன் கதையை நான்கு மணிநேர நாடகமாக உருவாக்கி நிகழ்த்தி காட்டியது. இந்த நாடகத்தில் நடிகர் நாசர், நடிகர் பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆனால், அவ்வளவு சீக்கிரம் எவரின் கைகளிலும் சிக்காமல் தப்பித்து வந்தது. இறுதியாக இயக்குநர் மணிரத்தினத்தின் கைக்கு தான் வாய்த்தது.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ரகுமான், நிழல்கள் ரவி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடிக்க பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.

மேலும் படிக்க: "யாரையாவது அடித்தால் போலீஸ் வருவாங்க.. போலீஸை அடித்தால் யாரும் வருவதில்லை.." - காவலர் குமுறல்

இந்நிலையில், 70ஆவது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில், பொன்னியின் செல்வன் பாகம் -1 நான்கு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அதில், தமிழின் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை, பெற்றது. அதேடு, சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதினை, ஏ.ஆர்.ரஹ்மானும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினை ரவிவர்மனும், சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதினை, ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் பெற்றுள்ளனர்.

பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததை நடிகர் விக்ரம் மற்றும் சரத்குமார் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம், “பொன்னியின் செல்வன் பாகம்1 திரைப்படம், பார்வையாளர்களின் அன்பினால் உந்தப்பட்டு, தேசிய அங்கீகாரத்துடன் முடிசூட்டப்பட்டதை, ஆசீர்வாதமாக உணர்கிறேன். தமிழ் வரலாறு, இலக்கியம், கலாச்சாரம் மற்றும் சினிமா ஆகியவை கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை ஒன்றாக இணைந்து வெற்றி நடை போடுகிறது! மணி சார், லைகா, ஏ.ஆ.ரஹ்மான், ரவிவர்மன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் பார்க்க: ரவுடியை சுட்டுப்பிடித்த உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்.. போதை பெண்ணால் பரபரப்பு..

அதேபோல நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தள பதிவில், “70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டதில், இயக்குனரும், தயாரிப்பாளருமான திரு.மணிரத்னம் அவர்கள் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்கு, சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி & ஒளிப்பதிவு என 4 பிரிவுகளில் நான்கு தேசிய விருதுக்கு தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 

கல்கி எழுதிய தமிழின் தலைசிறந்த நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாக்கப்பட்ட போது, பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில் பெருமை கொள்கிறேன். மேலும், அனைத்து மொழிகளிலும் தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கும் கலைஞர்கள் மற்றும் திரைத்துறையினருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow