சினிமா

GOAT Prashanth Salary: கோட் படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா..?

விஜய்யின் கோட் படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த பிரசாந்த், கோட் படம் மூலம் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்காக பிரசாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

GOAT Prashanth Salary: கோட் படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா..?
கோட் படத்திற்காக பிரசாந்த் வாங்கிய சம்பளம்

சென்னை: 1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசாந்த். இயக்குநரும் நடிகருமான தியாகராஜனின் மகனாக திரையுலகில் என்ட்ரி கொடுத்த பிரசாந்த், 90களில் சாக்லேட் ஹீரோவாக வலம் வந்தார். செம்பருத்தி, எங்க தம்பி, திருடா திருடா, கண்மணி, செந்தமிழ் செல்வன், ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி ஆகிய படங்கள், 90களில் பிரசாந்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்தன. விஜய், அஜித், சூர்யா அறிமுகமாகும் முன்பே ரஜினி, கமல், விஜயகாந்த் வரிசையில் டாப் ஸ்டாராக மாஸ் காட்டினார் பிரசாந்த்.

ஆனால், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோரின் அசுர வளர்ச்சி ஒருபக்கம், திருமண வாழ்க்கையில் தோல்வி இன்னொரு பக்கம் என, பிரசாந்தின் கேரியரே கேள்விக்குரியானது. ஒரு கட்டத்தில் ஃபீல்ட் அவுட்டான பிரசாந்த், இப்போது கோட் படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து விஜய்யின் கோட் படமும் வெளியாகவிருப்பதால் பிரசாந்த் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் படத்தில் விஜய்யின் நண்பராக நடித்துள்ளார் பிரசாந்த். இப்படத்தில் விஜய், பிரசாந்த் ஸ்குவாடில் பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான விசில் போடு பாடலில், விஜய், பிரபுதேவாவுடன் டான்ஸில் மரண மாஸ் காட்டியிருந்தார் பிரசாந்த். இதேபோல், படம் முழுக்க விஜய்யுடன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளாராம். விஜய்க்காகவே கோட் படத்தில் நடித்துள்ள பிரசாந்துக்கு சம்பளமும் கோடிகளில் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கோட் படத்திற்காக டாப் ஸ்டார் பிரசாந்த் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளாராம். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ள பிரசாந்த், 5 முதல் 7 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. கோட் படத்தைத் தொடர்ந்து மேலும் சில இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள பிரசாந்த், இனிமேல் ஆண்டுக்கு 3 முதல் 4 படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். பெரிய இயக்குநர்கள், அறிமுக இயக்குநர்கள் என வித்தியாசம் இல்லாமல் நடிக்கவிருப்பதாக பிரசாந்த் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க - திரைமொழியின் அசுரன்... வெற்றிமாறனின் வெற்றிப் பயணம்!

கோட் படம் வெளியான பின்னர் மீண்டும் நடிப்பில் பிஸியாகவுள்ள பிரசாந்த், அடுத்தடுத்து சூப்பர் ஹிட் கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கோட் படத்தை விஜய்க்காக பார்க்கவிருக்கும் ரசிகர்கள் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் பிரசாந்த் ரசிகர்களும் கொண்டாட ரெடியாகிவிட்டனர். ஏராளமான திரையரங்குகளில் பிரசாந்துக்கும் ரசிகர்கள் கட்-அவுட் வைத்து மாஸ் காட்டி வருகின்றனர்.