Best Actress Award 2022 : இதயங்களை கொள்ளையடித்த எதிர்வீட்டு ‘ஷோபனா'.. நித்யா மேனனுக்கு தேசிய விருது..

Nithya Menon Wins Best Actress Award in 70th National Film Awards 2022 : சிறந்த நடிகைக்கான 70ஆவது தேசிய விருது, நடிகை நித்யா மேனனுக்கு திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

Aug 16, 2024 - 22:19
Aug 17, 2024 - 15:21
 0
Best Actress Award 2022 : இதயங்களை கொள்ளையடித்த எதிர்வீட்டு ‘ஷோபனா'.. நித்யா மேனனுக்கு தேசிய விருது..
சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டது [திருச்சிற்றம்பலம்]

Nithya Menon Wins Best Actress Award in 70th National Film Awards 2022 : தனுஷ், நித்யா மேனன், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில், மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கிய திரைப்படம் திருச்சிற்றம்பலம். கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்து இருந்தார். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

உணவு டெலிவரி செய்யும் சாதாரண இளைஞனான பழம் என்றழைக்கப்படும் திருச்சிற்றம்பலம் [தனுஷ்], நேசமிக்க ஒரு துணைக்காக ஏங்குவதும், அதில் தோல்வியடைவதும், ஏமாற்றம் அடைவதுமாக சென்று கொண்டிருக்கும் அவருக்கு ஒரே துணையாக அமைவது, சிறுவயதில் இருந்து எதிர்வீட்டில் குடியிருக்கும் ஷோபனா நித்யா மேனன்(Nithya Menon) தான்.

வெள்ளந்தியான சிரிப்பு, காதலுக்கு கொடுக்கும் ஐடியா, திருச்சிற்றம்பலத்தின் தாத்தாவான பாரதிராஜாவுடனான கலகலப்பு, இறுதியில் திருச்சிற்றம்பலத்தின் உடனான காதல் என உணர்வு பிளம்பாக தனது அசாத்திய நடிப்பால் நித்யா மேனன்(Nithya Menon) மிளிர்ந்திருப்பார்.

திருச்சிற்றம்பலம் வசூல் ரீதியாக வெற்றிப்பெற்றதோடு, சிறந்த விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இருவரின் கள்ளங்கபடமற்ற நட்பை திரையில் கண்டு பொங்கிய 90களின் இளைஞர்கள், உண்மையிலேயே நமக்கு இப்படி ஒரு தோழி கிடைக்க மாட்டாளா என உருகினர். 

இந்நிலையில், 70ஆவது தேசிய விருதுகள்(70th National Film Awards 2022) இன்று அறிவிக்கப்பட்டது. அதில், சிறந்த நடிகைக்கான விருதினை(Best Actress Award 2022) நடிகை நித்யா மேனன்(Nithya Menon), திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக பெற்றுள்ளார். அதேபோல், நடன இயக்குநருக்கான விருது ஜானி மாஸ்டருக்கும், சதீஷ் கிருஷ்ணனுக்கும் [மேகம் கருக்காதா பாடல்] வழங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow