சினிமா

Jayam Ravi : ஒருபக்கம் விவாகரத்து சர்ச்சை... ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு... வைரல் அப்டேட்!

Actor Jayam Ravi JR 34 Movie First Look Poster : ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்துவிட்டார். ஆனால், அவரது மனைவி ஆர்த்தி இதற்கு சம்மதிக்காத நிலையில், ஜெயம் ரவி அடுத்தடுத்து அதிரடியாக முடிவெடுத்து வருகிறார்.

Jayam Ravi : ஒருபக்கம் விவாகரத்து சர்ச்சை... ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு... வைரல் அப்டேட்!
ஜெயம் ரவியின் 34வது படத்தை இயக்கும் கணேஷ் கே பாபு

Actor Jayam Ravi JR 34 Movie First Look Poster : கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெயம் ரவி, எந்த சர்ச்சைகளில் சிக்காதவர். ஆனால், கடந்த சில தினங்களாக ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான விவாகரத்து பிரச்சினை தான், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார் ஜெயம் ரவி. ஆனால், ஆர்த்தியோ இது ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு, எனக்கு இதில் சம்மதம் இல்லை என பதிலடி கொடுத்தார். இதனையடுத்து ஜெயம் ரவி, ஆர்த்தி இருவருமே மாறி மாறி தங்களது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.  

விவாகரத்து சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும், தனது சினிமா கரியரில் எப்போதும் போல பிஸியாக இருக்கிறார் ஜெயம் ரவி. அவர் நடித்துள்ள பிரதர் திரைப்படம் இந்த மாதம் இறுதியில் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. ராஜேஷ் எம் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம், தீபாவளி ரேஸில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதர் வரிசையில் காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் ஜெயம் ரவி.  

இந்நிலையில், ஜெயம் ரவியின் 34வது படம் குறித்த அப்டேட் அபிஸியலாக வெளியாகியுள்ளது. அகிலன், பிரதர்-ஐ தொடர்ந்து, ஜெயம் ரவியின் 34வது படத்தையும் ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கிறது. ஜெயம் ரவி – ஸ்க்ரீன் சீன் மீடியா கூட்டணியில் உருவாகும் 3வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பிரதர் படத்திற்குப் பின்னர், மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இணைகிறார் ஜெயம் ரவி. அதன்படி JR 34 படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். முக்கியமாக ஜெயம் ரவியின் 34-வது படத்தை ‘டாடா’ படம் மூலம் கவனம் ஈர்த்த, கணேஷ் கே பாபு இயக்குகிறார். 

கவின், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான ‘டாடா’ மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதன் பின்னர் கணேஷ் கே பாபு இயக்கும் படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி – கணேஷ் கே பாபு கூட்டணி இணைவது உறுதியாகியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. பக்கா ஆக்ஷன் ஜானர் மூவியான இதில், ஜெயம் ரவி இரண்டு கேரக்டர்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜெயம் ரவி ஜோடியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.