Mammootty Net Worth: துபாயில் பிரம்மாண்ட வீடு... பல சொகுசு கார்கள்... ராஜ வாழ்க்கை வாழும் மம்முட்டி

Actor Mammootty Net Worth 2024 in Tamil : மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமான மம்முட்டி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து மம்முட்டியின் புதிய படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மம்முட்டியின் சொத்து மதிப்பு, சம்பளம் குறித்த விவரங்களும் தற்போது தெரிய வந்துள்ளது.

Sep 7, 2024 - 10:52
Sep 7, 2024 - 16:26
 0
Mammootty Net Worth: துபாயில் பிரம்மாண்ட வீடு... பல சொகுசு கார்கள்... ராஜ வாழ்க்கை வாழும் மம்முட்டி
மம்முட்டியின் சொத்து மதிப்பு

Actor Mammootty Net Worth 2024 in Tamil : மலையாள சினிமா ரசிகர்களால் மெகா ஸ்டார் என கொண்டாடப்படும் மம்முட்டி, இதுவரை 400க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். 73 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து மாஸ் காட்டி வரும் மம்முட்டி, இப்போதும் ஆண்டுக்கு 3 அல்லது 4 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான டர்போ, பிரம்மயுகம், காதல் தி கோர், கண்ணூர் ஸ்குவாட் ஆகிய படங்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

கெளதம் மேனன் இயக்கும் இந்தப் படத்தில், மம்முட்டியுடன் சமந்தாவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், மம்முட்டி – கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘Dominic and The Ladies' purse’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுக்கு ஏற்ப மம்முட்டி வித்தியாசமான லுக்கில் இருக்கும் போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனிடையே மம்முட்டியின் பிறந்தநாளுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் மம்முட்டியின் சொத்து மதிப்பு(Actor Mammootty Net Worth) பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில் பெரும்பாலும் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி தான் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் முடிவு செய்யப்படுகிறது. அதன்படி, மம்முட்டி ஒரு படத்துக்கு 10 முதல் 15 கோடி ரூபாய் வரை சம்பளம்(Actor Mammootty Salary) வாங்குகிறாராம். இதுதவிர விளம்பரங்களிலும் நடித்து வரும் மம்முட்டி, அதற்காக 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வங்குவதாக சொல்லப்படுகிறது. மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் மம்முட்டி.

இதுதவிர மம்முட்டிக்கு(Actor Mammootty) சொந்தமாக திரையரங்குகள் உள்ளன, அதேபோல் மம்முட்டி கம்பெனி என அவரது பெயரில் தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். மேலும், ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களிலும் முதலீடு செய்துள்ள மம்முட்டி, இவையனத்தின் மூலம் ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறாராம். கேரளாவின் கொச்சியில் வசித்து வரும் மம்முட்டிக்கு, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் சொந்தமாக வீடுகள், பிளாட்கள் உள்ளன. இவைகளின் மதிப்பே பல கோடிகளை தாண்டும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக மம்முட்டி துபாயிலும் பல கோடி மதிப்பில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், மம்முட்டியிடம்(Actor Mammootty Car Collection) வெரைட்டியான சொகுசு கார்கள் ஏராளம் உள்ளன. Rolls Royce Phantom, 4 கோடி மதிப்பிலான Mercedes-Benz G-Class, 2 கோடி மதிப்புள்ள Range Rover Sport, 2 சீட்கள் மட்டுமே கொண்ட Jaguar F-type ஸ்போர்ட்ஸ் டைப் கார், BMW E 46 M3, Toyota Land Cruiser, Audi A7, Mini Cooper S, Mitsubishi Pajero Sport, Jaguar XJ ஆகிய கார்கள் மம்முட்டியிடம் உள்ளன. இதுதவிர ஏராளமான வின்டேஜ் ரக கார்களையும் சொந்தமாக தனது கேரேஜில் வரிசைக் கட்டி பார்க் செய்துள்ளாராம் மம்முட்டி. எவ்வளது தூரம் என்றாலும் மம்முட்டியே தனது காரை ஓட்டிச் செல்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல், படப்பிடிப்புக்குச் செல்ல தனியாக கேரவன் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார். இப்படி ராஜவாழ்க்கை வாழும் மம்முட்டியின் மொத்த சொத்து மதிப்பு 500 கோடிக்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow