ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் மற்றும் இங்கிலாந்து தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Jan 18, 2025 - 16:53
 0
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்.. இந்திய அணி அறிவிப்பு
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணியை தவிர்த்து மற்ற அணிகளுக்கான போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டி மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. 2017-ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

மொத்தம் 8 அணிகள் மோதும் இந்த தொடரில் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான அணிகளை மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்த நிலையில் இந்திய அணி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்பட்டது. 

மேலும் படிக்க: பெரியார்-அம்பேத்கரை நேர்கோட்டில் நிறுத்தாதவர்களை மூளை உள்ளவராக கருதக்கூடாது- ஆர்.ராசா

இந்நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வீரர்கள் விவரம்:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி,  ஷ்ரேயாஸ் ஐயர்,  கே.எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க: சட்டவிரோத மணல் கொள்ளை – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

முக்கிய பந்து வீச்சாளரான பும்ரா தசை பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்து வந்த நிலையில் இந்திய அணியில் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow