Women's T20 Ranking: டாப் 5க்குள் ஸ்மிருதி மந்தனா... ஷஃபாலி வர்மா எந்த இடம் தெரியுமா?

Women T20 Cricket Ranking List 2024 : இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு சென்றுள்ளார். தென்னாப்பிரிக்கா வீராங்கனை லாரா வோல்வார்ட் 736 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.

Jul 31, 2024 - 19:46
Aug 1, 2024 - 10:16
 0
Women's T20 Ranking: டாப் 5க்குள் ஸ்மிருதி மந்தனா... ஷஃபாலி வர்மா எந்த இடம் தெரியுமா?
Women T20 Cricket Ranking List 2024

Women T20 Cricket Ranking List 2024 : இலங்கையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த மகளிர் ஆசியக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி இலங்கையிடம் அதிர்ச்சி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து கோப்பையை தட்டித் தூக்கியது.

இந்த தொடரில் எந்த ஒரு தோல்வியையும் சந்திக்காமல் பைனலுக்கு வந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. ஆசியக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், மகளிர் டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 769 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அதே நாட்டு வீராங்கனை தஹ்லியா மெக்ராத் 762 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், வெஸ்ட் இண்டிஸ் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 746 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளார். இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடங்கள் முன்னேறி 743 புள்ளிகளுடன் 4ம் இடத்துக்கு சென்றுள்ளார். தென்னாப்பிரிக்கா வீராங்கனை லாரா வோல்வார்ட் 736 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் அமர்ந்துள்ளார். 

ஆசியக்கோப்பை தொடரில் அசத்திய இலங்கை வீராங்கனை சாமரி அட்டப்பட்டு 3 இடங்கள் முன்னேறி 705 புள்ளிகளுடன் 6ம் இடத்துக்கு சென்றுள்ளார். ஸ்மிருதி மந்தனாவை தவிர மற்ற இந்திய வீராங்கனைகள் யாரும் முதல் 10 இடங்களில் இல்லை. ஷஃபாலி வர்மா 631 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளார். பவுலிங்கை பொறுத்தவரை இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் 772 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து வீராங்கனை சாரா க்ளென் 760 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் அமர்ந்துள்ளார். இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 755 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், பாகிஸ்தான் வீராங்கனை சாடியா இக்பால் 743 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், இந்திய வீராங்கனை ரேணுகா சிங் 722 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர். இதேபோல்  இலங்கை வீராங்கனை இனோஷி பிரியதர்ஷனி 711 புள்ளிகளுடன் 6ம் இடத்திலும், வெஸ்ட் இண்டிஸ் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 703 புள்ளிகளுடன் 7ம் இடத்திலும், நியூசிலாந்து வீராங்கனை ஃபிரான் ஜோனாஸ் 694 புள்ளிகளுடன் 8ம் இடத்திலும் அமர்ந்துள்ளனர்.

அணிகள் தரவரிசையை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணி 294 புள்ளிகளுடன் முதலிட அரியணையில் அமர்ந்துள்ளது. இங்கிலாந்து அணி 285 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், இந்திய அணி 261 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணி 252 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 243 புள்ளிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow