விளையாட்டு

குட் நியூஸ் சொன்ன கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி... குவியும் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான கே எல் ராகுல்- அதியா ஷெட்டி தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளதை,  ராகுல் மனைவி அதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராகுல், அதியா ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும், அவர்களுடைய ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

குட் நியூஸ் சொன்ன  கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி...  குவியும் வாழ்த்து
குட் நியூஸ் சொன்ன கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதி... குவியும் வாழ்த்து

கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடி கடந்த 2023 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதியா ஷெட்டி பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளா அதியா ஷெட்டியும் பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.  பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு அதியாவின் தந்தையான சுனில் ஷெட்டி சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும், பின்னர் அவரின் சம்மதத்தோடு இவர்களின் திருமணம் நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணி ராகுல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கிய கே.எல். ராகுல் இந்த ஆண்டு டெல்லி அணியின் வீரராக களமிறங்குகிறார். ஆனால், இன்றைய போட்டியில் கே.எல். ராகுல் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காரணம் தெரியாமல் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பிறகு இன்றைய போட்டியில் அவர் பங்கேற்கவில்லை என்றும், மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் ஐதரபாத் அணியுடனான போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.

தந்தையான ராகுல்

கே.எல். ராகுலின் மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் சமூகவலைதளத்தில் போட்டோக்களை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ராகுல் மனைவியான அதியா ஷெட்டி அவருடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதியா வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில்,  "Blessed with a baby girl" என்ற வாசகத்துடன் ஒரு போட்டோவை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.  அதியா-ராகுல் பெண் குழந்தையை பெற்றுள்ளோம்” என்றும் அதில் நேற்றைய தேதியான, 23.4.2025 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை அவதாரம் எடுத்துள்ள ராகுலுக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.