ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி ஒன்பது ஐந்து சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Feb 5, 2025 - 11:12
 0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை நிலவரம் என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

தமிழகம் முழுவதும் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருமகன் ஈவேரா வெற்றி பெற்றார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், திருமகன் ஈவேராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இவர் கடந்த டிசம்பர் 14-ம் தேதி உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று  (பிப். 5) இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக, பாஜக, தேமுதிக உள்பட எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. 

மேலும் படிக்க: ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா..? புறக்கணிப்பா..? பாஜக ஆலோசனை

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா, சம்பத்நகர் அருகிலுள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்கினை செலுத்தி, ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அனைத்து இடங்களிலும் பிரச்னைகள் எதுவும் இன்றி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.

திமுக வேட்பாளர் சந்திரகுமார், கொசுவண்ண வீதியிலுள்ள தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்களே இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும் என்று கூறினார். 

மேலும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10 புள்ளி ஒன்பது ஐந்து சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow