தனுஷுக்கு தக் லைஃப் கொடுத்த சிம்பு... ராயன் Vibe-க்கு என்ட் கார்ட் போடும் முயற்சியா இது..?

Actor Simbu Thug Life Update Trending : தனுஷின் ராயன் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், தக் லைஃப் படத்தில் இருந்து வெளியான சிம்புவின் அப்டேட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Jul 27, 2024 - 15:49
Jul 27, 2024 - 17:34
 0
தனுஷுக்கு தக் லைஃப் கொடுத்த சிம்பு... ராயன் Vibe-க்கு என்ட் கார்ட் போடும் முயற்சியா இது..?
Actor Simbu Thug Life Update vs Dhanush Raayan Movie

Actor Simbu Thug Life Update Trending : ரஜினி – கமல், விஜய் – அஜித் வரிசையில் சிம்பு – தனுஷ் இடையேயான பஞ்சாயத்து ரசிகர்களிடம் நீறுபூத்த நெருப்பாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. பொதுவெளியில் இருவரும் நண்பர்களைப் போல காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் கடும் போட்டி காணப்படுகிறது. இந்நிலையில் தனுஷின் 50வது படமான ராயன் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதனை தனுஷே இயக்கி நடித்துள்ளார், ஏஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அதோடு எஸ்ஜே சூர்யா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், பிரகாஷ்ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராயன் படத்திற்கு தனுஷ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தாலும், பொதுவான ஆடியன்ஸ்களிடம் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. முக்கியமாக ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம் தான் ராயன் படத்துக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. இதனால் இந்தப் படத்தை பக்கா தியேட்டர் மெட்டீரியல் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதனையடுத்து தனுஷ், ராயன், ஏஆர் ரஹ்மான் ஆகிய ஹேஷ்டேக்கள் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தன. இதற்குப் போட்டியாக திடீரென சிம்பு, தக் லைஃப் போன்ற ஹேஷ்டேக்களும் நேற்றிரவு முதல் ட்ரெண்டாக தொடங்கின. 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் தக் லைஃப் படத்தில் சிம்புவும் கமிட்டாகியுள்ளார். முன்னதாக துல்கர் சல்மான், ஜெயம் ரவி இப்படத்தில் நடிக்கவிருந்தனர். அவர்கள் கால்ஷீட் பிரச்சினையால் விலகியதை அடுத்து, தக் லைஃப் படத்தில் சிம்பு என்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து சிம்புவுக்காக தரமான கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் தான் நேற்று முதல் தக் லைஃப், சிம்பு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதாவது தக் லைஃப் படத்தில் சிம்பு டப்பிங் கொடுக்கும் போட்டோவை ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டது.

தக் லைஃப் படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில், அதற்குள் சிம்பு டப்பிங் கொடுக்க வந்துவிட்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சியாகினர். ஆனால், சிம்பு டப்பிங் கொடுத்தது உண்மைதான் என்றாலும், அவருக்கு இன்னும் படப்பிடிப்பு உள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் தனுஷின் ராயனுக்கு டஃப் கொடுக்கவே சிம்புவின் போட்டோ நேற்று வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் தனுஷ் ராயன் படம் மூலம் மாஸ் காட்டினால், சிம்பு ஒரேயொரு போட்டோவை வைத்தே கெத்து காட்டுவார் என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க - தனுஷின் ராயன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்

அதற்கேற்றபடி தனுஷின் ராயன் ஹேஷ்டேக்கை விட, சிம்புவின் தக் லைஃப் டிவிட்டரையே அதிர வைத்துள்ளது. அசுர வேகத்தில் நடைபெற்று வரும் தக லைஃப் ஷூட்டிங், இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தை அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 பொங்கல் பண்டிக்கைக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow