’சித்தா’ பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன்’. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 27-ஆம் தேதி வெளியானது.
இடைக்கால தடை
’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஆர் பிக்சர்ஸுக்கு நிதியுதவி வழங்கிய பி4யு நிறுவனத்திற்கு ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக அந்நிறுவனம் (பி4யு) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து, இப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழ்நாட்டில் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாலை காட்சிகள் வெளியானது.
அபார வசூல்
இப்படி பல தடைகளை தாண்டி வெளியான ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் இதுவரை 52 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், ‘காளி தனித்துவமான வெற்றியால் பாக்ஸ் ஆபீஸை ஆழ்கிறார்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
சினிமா
Box office-ஐ கலக்கும் காளி.. ‘வீர தீர சூரன்’ சூப்பர் அப்டேட்
விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.