சிறுநீரை பயன்படுத்தும் சுனிதா வில்லியம்ஸ்.. பீட்சா, சிக்கன் சாப்பிடுவதாக அறிவிப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரர்கள் சிறுநீர் மற்றும் வியர்வையை மறுசுழற்சி முறையில் நன்னீராக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் நாசா சார்பில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர்.
எட்டு நாட்கள் பயணமாக விண்வெளி நிலையத்திற்கு சென்றவர்கள் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாத கணக்கில் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். இவர்களை மீட்பதற்காக நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விண்வெளி வீரர்கள் இருவரும் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்திருந்தது. இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தவாறே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார்.
சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வலம் வந்தது. இதில் சுனிதா வில்லியம் உடல் எடை குறைந்து காணப்பட்டதால் மன அழுத்தம் காரணமாகவே அவர் அவ்வாறு இருப்பதாக வதந்திகள் பரவியது.
இதற்கு மறுப்பு தெரிவித்த நாசா, விண்வெளி வீரர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருவதாகவும், அவர்களுக்கு வழக்கமான உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் விளக்கம் அளித்தது.
தொடந்து, தான் அதே உடல் எடையுடன் இருப்பதாகவும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் மைக்ரோ கிராவிட்டியினால் ஏற்படும் வழக்கமான மாற்றத்தால் அவ்வாறு தெரிவதாகவும் சுனிதா வில்லியம் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும், பீட்சா, சிக்கன் போன்ற உணவு பொருட்களை உட்கொண்டு வருவதாகவும், அவர்களது உடல்நிலை குறித்து கவலை கொள்ளவேண்டாம் என்றும் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
மேலும், சுனிதா வில்லியம், புட்ச் வில்மோர் ஆகியோர் தங்களது வியர்வை மற்றும் சிறுநீரை மறுசுழற்சி முறையில் நன்னீராக்கி பயன்படுத்தி வருவதாக செய்தி நிறுவனங்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?