Bangladesh Violence : வங்கதேசத்துக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்.. மத்திய அரசு எச்சரிக்கை

Union Government on Bangladesh Violence : வங்கதேசத்தில் வன்முறை நடந்து வருவதால் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை இந்தியர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Aug 5, 2024 - 10:42
Aug 6, 2024 - 10:10
 0
Bangladesh Violence : வங்கதேசத்துக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்.. மத்திய அரசு எச்சரிக்கை
வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்

Union Government on Bangladesh Violence : 1971ம் ஆண்டு பாகிஸ்தானிடமிருந்து வங்கதேச விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ‘முக்தி யோதா’க்கள் என்றழைக்கப்படுகின்றனர். இந்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. 'இந்த இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் திறமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்து வங்கதேசம்(Bangladesh) நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த மாதம் தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர்நகர் பல்கலைக்கழகத்தில் திரண்ட மாணவர்கள் அமைப்பினர் இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். 

அப்போது போராட்டம் நடத்திய மாணவர்கள் சங்கங்களுக்கும், ஆளும் அரசு ஆதரவு கொண்ட மாணவர்  சங்கங்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 100 மாணவர்கள் காயம் அடைந்ததோடு மேலும் 200 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.

மாணவர்களின் இந்த மோதல்(Bangladesh Violence) டாக்கா, சட்டோகிராம் மற்றும் ரங்பூர் என நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. இடஒதுக்கீடுக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் காவல்துறையினருக்கும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களுக்கும் இடையே மோதல் பயங்கரமாக வெடித்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீட்டை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அண்மையில் இடஒதுக்கீடு குறித்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தார்.  

இவரது இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் நேற்று முன்தினம் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில், “இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்; ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும்” என்ற பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். 

இதையடுத்து 2ம் நாளான நேற்றும், பல்வேறு இடங்களில் மாணவர்கள் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு எதிராக ஆளும் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் களமிறங்கினர். இதனால் இருதரப்பினருக்குமிடையே கடுமையான மோதல் ஏற்பட்டு பின்பு கலவரமானது. போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள் மீது தடியடி நடத்தும் சூழல் உருவானது. இதனைக் கண்டித்து டாக்காவில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு தீ வைக்கப்பட்டது. 

மேலும் படிக்க: இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு

டாக்காவில் நேற்று நடந்த இந்த கலவரத்தில் 14 காவலர்கள் உட்பட 91 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வன்முறை நடந்து வருவதால் மறுஅறிவிப்பு வெளியாகும் வரை இந்தியர்கள்(Indians in Bangladesh) யாரும் வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow