அடேங்கப்பா.. இத்தனை பேர்களா? இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். ஸ்டார்மர் புதிய பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இது தொழிலாளர் கட்சிக்கு சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Jul 6, 2024 - 20:57
Jul 6, 2024 - 21:08
 0
அடேங்கப்பா.. இத்தனை பேர்களா? இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர்
UK Election Results 2024 Winning MP List

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 26 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை (பழமைவாதக் கட்சி) வீழ்த்தி கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்த முள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளில் 412 தொகுதிகளில் வென்று அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்கிறது தொழிலாளர் கட்சி. 

இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க 50 சதவீத நாடாளுமன்ற தொகுதிகளை வென்று இருக்க வேண்டும். 356 இடங்களைப் பெறும் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இயலும். இந்த தேர்தலில் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவராகவும் இங்கிலாந்து எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த ஜெர்மி கோர்பின் பாலஸ்தீன ஆதரவு மற்றும் முற்போக்கு கொள்கைகளை முன் வைத்தார்.

ஜெர்மி கோர்பின் இஸ்லிங்டன் வடக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தொழிலாளர் கட்சியின் மிகப்பெரும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான பிரஃபுல் நர்குனை வீழ்த்தி மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வெற்றி மிகப்பெரும் வெற்றியாக சர்வதேச அளவில் பாராட்டப்படுகிறது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 355 இடங்களை வென்றிருந்தது. மேலும் 2010 முதல் தொடர்ந்து ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி தற்போது தனது பெரும் தோல்வியை தழுவியுள்ளது.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். ஸ்டார்மர் புதிய பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 20 ஆண்டுகளில் இது தொழிலாளர் கட்சிக்கு சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் குறித்து கூறியுள்ள முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், “இந்த கடினமான இரவில், தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரிச்மண்ட் மற்றும் நோர்தாலர்டன் தொகுதி மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இங்கு குடியேறியதிலிருந்து, என்னையும் என் குடும்பத்தையும் வீட்டில் இருப்பதை நீங்கள் உணர வைத்துள்ளீர்கள். மேலும் பல ஆண்டுகளாக உங்களுக்கு சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார். மேலும், மக்கள் நிதானமான தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில், தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். ஜாஸ் அத்வால் (தெற்கு இல்ஃபோர்ட்), பேக்கி ஷங்கர் (தெற்கு டெர்பி), சத்வீர் கவுர் (சவுத்தாம்ப்டன் டெஸ்ட்), ஹர்ப்ரீத் உப்பல் (ஹடர்ஸ்ஃபீல்ட்), வாரிந்தர் ஜஸ் (தெற்கு வால்வர்ஹாம்ப்டன்). குரிந்தர் ஜோசன் (ஸ்மெத்விக்), கனிஷ்கா நாராயண் (வேல் ஆஃப் கிளாமோர்கன்), சோனியா குமார் (டட்லி), சுரீனா பிராக்கன்பிரிட்ஜ் (வடகிழக்கு வால்வர்ஹாம்ப்டன்), கிரித் என்ட்விசில் (போல்டன் நார்த் ஈஸ்ட்), ஜீவுன் சாந்தர் (லஃபரோ) மற்றும் சோஜன் ஜோசப் (ஆஷ்ஃபோர்ட்) ஆகியோர் தொழிலாளர் கட்சி சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow